பகீர்… அமாவாசை இரவில் நடந்த கொடூரம்: 6 வயது பேரனை நரபலி கொடுத்த பாட்டி..? வேலூரில் பரபரப்பு…!!

Spread the love

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால் கடந்த 40 நாட்களாகத் தந்தை வழிப் பாட்டி விஜயாவின் வீட்டில் வளர்ந்து வந்த 6 வயது சிறுவன் முகிலன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். சிறுவன் உடல்நலக்குறைவால் இறந்ததாகக் கூறி அவனது சடலத்தை வீட்டில் வைத்திருந்த நிலையில், முந்தைய நாள் வரை நன்றாக இருந்த சிறுவனின் மரணத்தில் அக்கம்பக்கத்தினருக்குச் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த மேல்பட்டி போலீஸார், சிறுவனின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காகக் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் தந்தை வழிப் பாட்டி விஜயா மற்றும் அவரது மகள் ரேவதி ஆகியோர் தொடர்ந்து மாந்திரீகச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அமாவாசை தினமான முந்தைய நாள் இரவில் அவர்கள் சிறுவனை நரபலி கொடுத்திருக்கலாம் என்று அஞ்சுவதாகவும், இதனாலேயே சிறுவனின் மரணம் குறித்து அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், சிறுவனின் தாய் வழிப் பாட்டி விஜயா பேசுகையில், குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்ததாகவும், முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளதால், அவனது தந்தை வழிப் பாட்டி மீது 100 சதவீதம் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரியுள்ளார். இப்புகார்களின் அடிப்படையில் பாட்டி விஜயா மற்றும் அவரது மகள் ரேவதியிடம் மேல்பட்டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“அடிக்க அடிக்க உயர்வோம்”… அன்பில் மகேஷ் கைதால் கொதித்த சேகர்பாபு… சென்னையில் பரபரப்பு பேட்டி….!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு, திமுக-வை நோக்கி இதுபோன்று ஆயிரக்கணக்கான…

6 மணத்தியாலங்கள் ago

வாட்ஸ்அப் காதலில் மயங்கி நாட்டை காட்டிக் கொடுத்த முன்னாள் ராணுவ கேப்டன்…. வேலூரில் அரங்கேறிய ஷாக் சம்பவம்…!

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராணுவத்தில் இணையும் போதே வீரர்கள் ரகசியங்களை காக்க கடுமையான உறுதிமொழி ஏற்கின்றனர். இந்த…

6 மணத்தியாலங்கள் ago

“ப்ளீஸ் வேண்டாம்… விட்டுடுங்க பிரதீப்”…. அறைக்கு அழைத்து வந்த காதலன்… கத்தியால் குத்திவிட்டு லாரியில் பாய்ந்து தற்கொலை…. ஓசூரில் அறைக்குள் அரங்கேறிய திடுக்கிடும் ரத்தக் கொலை…..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதலியை கத்தியால் குத்திவிட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும்…

6 மணத்தியாலங்கள் ago

ரூ.100 கோடி ஊழல் புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி கைது…. மு.க.ஸ்டாலின் சொன்ன பரபரப்பு காரணம்…. தமிழக அரசியலில் வெடித்தது புதிய புயல்….!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச் சேர்ந்த…

6 மணத்தியாலங்கள் ago

“1000 முறை கூட கல்யாணம் பண்ணுவேன்”…. விஜய் தேவரகொண்டா சர்ச்சைக்கு ராஷ்மிகாவின் அதிரடி பதில்….!

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடனான தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக எழுந்து வரும் வதந்திகளுக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்…. 5 தொகுதி இடைத்தேர்தல்…. திமுக போட்ட ஸ்கெட்ச்… அன்பில் மகேஷுக்கு செக் வச்ச ஹைகோர்ட்…!

தமிழகத்தில் காலியாகவுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் முறைப்படி அறிவிக்கப்படாத நிலையிலும், அதற்குள்ளாகவே அரசியல் களம் சூடுபிடிக்கத்…

6 மணத்தியாலங்கள் ago