தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகக் கூறி எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், நாளை மறுநாள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் ஆர்லேக்கர் சந்திக்க உள்ளார். குறிப்பாக, தீபாவளி பண்டிகையின் போது ஒரே நாளில் 11 கொலைகள் பதிவானது மற்றும் இதில் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர சம்பவங்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போனது போன்ற தொடர்ச்சியான பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் ரீதியாகவும் பல்வேறு சர்ச்சைகள் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பி உள்ளன. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தவெக எம்எல்ஏ மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொதுமக்களைத் தாக்கியதாக வந்த விமர்சனங்கள் ஆளும் தரப்புக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளன. மேலும், தவெக ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்கும் தற்போதைய சூழலில், அமைதியான முறையில் நடக்கும் நியாயமான போராட்டங்களுக்குக் கூட காவல்துறை உரிய அனுமதி மறுப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில், ஆளுநர் ஆர்லேக்கருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் இடையே நடைபெற உள்ள சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை ஆளுநர் அமித்ஷாவிடம் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் நிகழ்ந்த தொடர் படுகொலைகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த இந்த ஆலோசனையானது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளதுடன், தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…