21 நாட்களில் இனி எல்லாமே மாறும்…. தமிழக அரசு போட்ட அந்த ஒற்றை கையெழுத்து…. விஜய் அரசின் அதிரடி மூவ்…. ஆளுநர் அர்லேகர் சிக்னல் கொடுத்ததன் ரகசியம்….!

Spread the love

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதையும், புதிய தொழில் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு வணிக எளிதாக்கல் (திருத்த) சட்டம், 2026-க்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாநில அரசிதழிலும் வெளியிடப்பட்டு, உடனடியாகச் சட்ட வடிவம் பெற்றுள்ளது. மாநிலத்தில் முதலீட்டுச் சூழலை மேலும் சுலபமாக்கி, புதிய நிறுவனங்கள் தொடங்குவதில் ஏற்படும் தேவையற்ற காலதாமதத்தைத் தவிர்ப்பதே இந்தச் சட்டத் திருத்தத்தின் முதன்மை நோக்கமாகும்.

இச்சட்டத் திருத்தத்தின் மிக முக்கிய அம்சமாக, அரசுத் துறை சான்றிதழ்கள் மற்றும் அனுமதிகளை வழங்குவதற்கான காலவரம்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெற 21 நாட்களுக்கு மேலாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலோ அல்லது காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படாமல் இருந்தாலோ, அவை அனைத்தும் அதிகபட்சமாக 21 நாட்களுக்குள் வழங்கி முடிக்கப்பட வேண்டும் எனக் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்கள் தவிர்த்து கணக்கிடப்படும் இந்த 21 நாள் கெடு நடைமுறை, முதலீட்டாளர்களுக்கு விரைவான மற்றும் நம்பகமான சேவைக்கு வழிவகுக்கும்.

மேலும், மாநிலத்தில் பெருந்திட்ட முதலீடுகளைக் கண்காணித்து விரைவுபடுத்த “தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்” என்ற உயர்நிலைக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. தலைமைச் செயலாளர் தலைவராகவும், தொழில்துறைச் செயலாளர் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படும் இந்த ஆணையத்தில் அதிகபட்சமாக 20 உறுப்பினர்கள் இடம்பெறுவர். ரூ.200 கோடிக்கும் அதிகமான மூலதன முதலீடு, 5,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு, வெளிநாட்டுத் தமிழர்களின் முதலீடுகள் மற்றும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சார்ந்த திட்டங்களை இந்த ஆணையம் நேரடியாகக் கண்காணித்து அனுமதி நடைமுறைகளை துரிதப்படுத்தும்.

திட்டம் தொடங்கும் முன்பான ஆரம்பக் கட்டம் முதல் வணிக ரீதியிலான உற்பத்தி தொடங்கும் வரை அனைத்துச் செயல்பாடுகளையும் தொடர்ந்து ஆய்வு செய்யும் அதிகாரம் இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு அனுமதிகள் மற்றும் சலுகைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யச் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நேரடியாக உத்தரவிடவும், தொழில் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை மறுஆய்வு செய்யவும் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தச் சட்டத் திருத்தம் பெரும் உறுதுணையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

Nanthini

Recent Posts

“இப்படி ஆகிருச்சே…! கஷ்டப்பட்டு சேர்த்த பணம்…” வீட்டில் ஒளித்து வைத்த பணத்தை கடித்து குதறிய எலிகள்…! கதறும் குடும்பத்தினர்…. பகீர் சம்பவம்…!!

தன் வாழ்நாளின் கடின உழைப்பால் சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என நினைத்துப் பூட்டி…

2 minutes ago

சின்ன பையன் பண்ற வேலையா இது…? “என்னை பிளாக்மெயில் பண்றான்…” 16 வயது சிறுமியை பலமுறை சீரழித்த சிறுவன்… பகீர் சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை, அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 17…

22 minutes ago

மயக்க ஸ்ப்ரே அடித்து துணிச்சலான கொள்ளையா…? தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. 3 மாடியில் சல்லடை போட்டு தேடி பணம், நகை அபேஸ்…. வைரலாகும் CCTV காட்சிகள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜயநகர் பகுதியில் அமைந்த 3 மாடி வீடொன்றில், வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த…

35 minutes ago

அதிரடி ஆக்‌ஷனில் முதல்வர் விஜய்… தூக்கப்படப்போகும் முக்கிய அமைச்சர்கள்?… கசிந்தது உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்…..!

தமிழக அரசியலில் தவெக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் விஜய்…

41 minutes ago

FLASH: வங்க கடலில் உருவானது புதிய புயல்… சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை வெளுக்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது மேலும் வலுவடைந்து புதிய புயலாக மாறியுள்ளதாக அதிகாரப்பூர்வத்…

44 minutes ago

ரூ.10,000 சம்பள பாக்கி… ரூ.24 கோடியை சாம்பலாக்கிய அக்கவுண்டன்ட்…. குஜராத்தில் அரங்கேறிய பயங்கரம்….!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சரோலி ஷ்யாம் சாங்கினி டெக்ஸ்டைல் மார்க்கெட்டில், கடந்த 9-ஆம் தேதி நள்ளிரவில் திடீரெனப் பயங்கர…

51 minutes ago