அதிகாரத் திமிர்…! “நான் ஒரு பொண்ணு, உங்களை வழக்கில் சிக்க வைப்பேன்… பொதுமக்களை மிரட்டிய பெண் அரசு ஊழியர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

Spread the love

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தபால் நிலையத்தில், ஆதார் அட்டை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்துக் கேள்வி எழுப்பிய கிராம மக்களிடம் பெண் ஊழியர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகத் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அட்டை வராதது குறித்து கிராம மக்கள் அவரிடம் முறையிட்டபோது, அந்த ஊழியர் பொறுப்பற்ற முறையிலும் ஆக்ரோஷமாகவும் பதிலளித்துள்ளார்.

இந்த வாக்குவாதத்தின் போது, அங்கிருந்தவர்கள் தங்களின் செல்போனில் வீடியோ எடுப்பதைக் கவனித்த அந்தப் பெண் ஊழியர், மேலும் கோபமடைந்து அவர்களை நோக்கி மிரட்டல் விடுத்துள்ளார். குறிப்பாக, “நான் ஒரு பெண், உங்களை வீணாகப் பழிவாங்கி (வழக்குகளில்) சிக்க வைக்க முடியும்” என்று அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளது அங்கிருந்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அரசுப் பணியில் இருக்கும் ஒரு ஊழியர், பொதுமக்களின் குறைகளுக்கு முறையான பதில் அளிக்காமல், தான் ஒரு பெண் என்ற சாதகத்தைப் பயன்படுத்திப் பொய்யான புகாரில் சிக்க வைப்பேன் என்று மிரட்டியிருப்பது இணையதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

1 minute ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

2 minutes ago

பழிவாங்கலா?… கொடூர தாக்குதலா?… கத்தியால் சரமாரி வெட்டு… போலீசையே உறைய வைத்த சிறுமியின் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

17 minutes ago

அலறியடித்து ஓடிய மக்கள்… நடுரோட்டில் நடந்த ரியல் ‘GTA’ ஆட்டம்… யார் அந்த மர்ம டிரைவர்?!… திடீரென பின்னோக்கி பாய்ந்த கார்… சிசிடிவியிலும் சிக்காத மர்மம்…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…

25 minutes ago

ஆந்திராவில் கரை ஒதுங்கிய உடல்கள்… காசிமேட்டில் வெடித்த மக்கள் ஆத்திரம்… எங்கே போனார் மீன்வளத்துறை அமைச்சர்?…. அடுத்த பரபரப்பு….!

காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…

33 minutes ago

இன்னும் மாறாத கொடூரம்… ஆண் குழந்தை பிறக்கவில்லை… மாமியார் வீட்டு கொடுமை… பெற்ற மகளை கொன்ற தாய்… கண்ணீர் வரவழைக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…

34 minutes ago