#image_title
நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வந்தார். இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் முடிவடைந்து விட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை படக்குழுவினர் தீவிரமாக செய்து வருகிறார்கள். இந்த படத்தின் ரிலீஸ் ஆனது டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளிவிடலாம் என்று கூறப்படுகிறது.
#image_title
இதற்கிடையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்தது.
#image_title
அதன் பிறகு ஸ்பெயினுக்கும் பட குழுவினர் சென்று சூட்டிங் எடுத்து வருகிறார்கள். இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக மிரட்ட இருக்கிறார். மேலும் நடிகர் பிரசன்னாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
#image_title
முன்னதாக இந்த படமானது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தாமதத்தால் இந்த படம் அடுத்த வருடம் மே மாதம் அல்லது அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் படத்தின் சூட்டிங் இந்த வருடத்திற்கு முடிவு செய்ய ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
#image_title
இதற்கிடையே இந்த படத்தில் அஜித் நியூ கெட்டப்பில் இளமையான லுக்கில் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வந்தது. இந்த நிலையில் அஜித்தின் இந்த லுக்கிற்கான காரணம் காஸ்டியூம் டிசைனர் அணு வரதன் என்று கூறப்படுகிறது. இவர் விஷ்ணுவர்தனின் மனைவி ஆவார்
தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத…
மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு குடும்பத்தையே சிதைத்து நீதிமன்றத் தீர்ப்பு வரை…