#image_title
தமிழ் சினிமாவில் தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ ஆர் முருகதாஸ். அதன் பின்னர் அவர் இயக்கிய ரமணா, கஜினி மற்றும் ஸ்டாலின் ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.
இதையடுத்து அவர் தமிழில் தான் இயக்கிய கஜினி திரைப்படத்தையே இந்தியில் அமீர்கானை வைத்து ரீமேக் செய்தார். அந்த படம் இந்திய சினிமாவில் முதல் முதலாக 200 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.
அதன் பின்னர் மீண்டும் தமிழுக்கு திரும்பிய அவர் ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, சர்கார், தர்பார் என பல பெரிய பட்ஜெட் படங்களை இயக்கினார். இதில் தர்பார் படுதோல்வி அடைந்ததால் அவர் இயக்கத்தில் முன்னணி ஹீரோக்கள் நடிக்க தயங்கினர்.
இப்போது சிவகார்த்திகேயன் மற்றும் சல்மான் ஆகியோருக்கு படங்கள் இயக்கி வருகிறார். இந்நிலையில் ஏ ஆர் முருகதாஸை தான் முதல் முதலாக நேர்காணல் செய்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “ரமணா படம் ரிலீஸ் ஆனபோது நான் NDTV யில் வேலை பார்த்து வந்தேன். அப்போது முருகதாஸை நேர்காணல் செய்ய சென்றேன். அவரை நான் பார்த்ததில்லை. அவர் வர வெகுநேரம் ஆனது. அப்போது ஒருவர் ஒல்லியான தோற்றத்தோடு டிவிஎஸ் எக்ஸ் எல் பைக்கில் வந்தார். அவரிடம் சென்று நான் தம்பி “டைரக்டர் எப்ப வருவாரு?’ எனக் கேட்டேன்.
அதற்கு அவர் “நான்தான் சார் முருகதாஸ்” என சொன்னார். அந்த அளவுக்கு எளிமையாக இருந்தார். அதன் பின்னர் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நேர்காணலை தொடர்ந்தேன்” எனப் பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…