கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் அருகே வசிக்கும் ஒரு கட்டுமானத் தொழிலாளிக்கு மனைவியும், 17 வயது மகளும், 13 வயது மகனும் உள்ளனர். மகள் பிளஸ் டூ படித்து வருகிறாள். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறால் மனைவி வீட்டை விட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு இரு குழந்தைகளையும் தந்தை தான் பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த வாரம் அந்தப் பகுதியில் நடந்த மோதலில் அவர் மீது குற்ற வழக்கு பதிவானது. ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் உறவினர்களிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
தந்தை தலைமறைவான செய்தி மனைவிக்கு தெரிந்தது. உடனே அவர் குழந்தைகளை தொலைபேசியில் அழைத்துப் பேசத் தொடங்கினார். இந்த நிலையில் 17 வயது மகள் அந்த ஊரைச் சேர்ந்த 19 வயது இளைஞரை காதலித்து வந்தார். இது தாயாருக்கு முன்பே தெரியும். எனவே அந்த இளைஞரை தொடர்பு கொண்டு, மகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். ஒரு வாரமாக அந்த இளைஞர் தினமும் உணவு பொட்டலத்துடன் வீட்டுக்கு வந்து, மாணவியை சந்தித்து சென்றார். வந்ததும் கதவை சாத்திக் கொண்டு இருவரும் தனியாக இருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல உணவுடன் வந்த இளைஞரை மாணவி உள்ளே அழைத்து கதவை பூட்டிக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தலைமறைவாக இருந்த தந்தைக்கு போனில் தகவல் சொன்னார்கள். அதே நேரத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்திருந்தது. உடனே வீடு திரும்பிய அவர் கதவைத் தட்டினார். உள்ளே இருந்து மகளும் இளைஞரும் வெளியே வந்தனர். இதைக்கண்டு ஆத்திரமடைந்த தந்தை மகளை அடித்து கண்டித்தார். இளைஞரையும் திட்டினார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். உடனே மகள், “நீ தான் என்னை தவறாக நடத்த முயன்றாய், உன் மீது போக்சோ வழக்கு போடுவேன்” என்று தந்தையை மிரட்டியுள்ளார். இதைக் கேட்ட தந்தை மனம் உடைந்து போனார். போலீசார் முன் புகார் எதுவும் கொடுக்காமல் அழுதபடி திரும்பிச் சென்றார். சிறுமியை தனியாக விட முடியாது என்பதால் போலீசார் தாயாரை அழைத்தனர்.
தாயார் வந்து, “நான்தான் என் மகளுக்கு உணவு வாங்கிக் கொடுக்கச் சொன்னேன், அவர்கள் எதுவும் தவறு செய்யவில்லை, எல்லாம் எனக்குத் தெரியும்” என்று கூறினார். மகளை அழைத்துக் கொண்டு சென்றார். புகார் எதுவும் இல்லாததால் இளைஞரை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விவகாரத்தில் காவல்துறைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…