#image_title
தமிழ் சினிமாவை இந்திய அளவில் கொண்டு சென்றதில் மறைந்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் வாசனுக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த ஔவையார், சந்திரலேகா உள்ளிட்ட படங்கள் பிரம்மாண்டத்தால் ரசிகர்களை வாய்பிளக்க வைத்தன. அதிலும் சந்திரலேகா என்ற திரைப்படம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெற்ற வெற்றியை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
அதே போல தமிழ்நாட்டில் இருந்து இந்திக்கு சென்று மிகப் பிரம்மானடமாகப் படங்கள் இயக்கி, அதில் வெற்றியும் கண்டவர் வாசன். அவர் விலைக்கு வாங்கி மாற்றம் செய்த ஜெமினி ஸ்டுடியோ சென்னையின் மையம் என சொல்லப்படும் இடத்தில் 35 ஆண்டுகள் இயங்கியது.
Gemini studios
இந்த 35 ஆண்டுகளில் ஜெமினி ஸ்டுடியோ நிறுவனம் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தடட 50 படங்கள் வரை தயாரித்துள்ளனர். எப்படி புகழின் உச்சத்துக்கு விறுவிறுவென ஜெமினி நிறுவனம் சென்றதோ, அதே போலவே வீழ்ச்சியையும் சந்தித்தது.
1969 ஆம் ஆண்டு எஸ் எஸ் வாசன் இறந்தார். அதன்பின்னர் ஜெமினி ஸ்டுடியோவின் பொறுப்புகளை அவரது மகன் பாலசுப்ரமணியன் ஏற்று நடத்தினார். ஆனால் அவர் பொறுப்புக்கு வந்து ஆறே ஆண்டுகளில் ஜெமினி ஸ்டுடியோஸ் 1975 ஆம் ஆண்டு மூடப்பட்டது. அப்போது திரைப்பட தயாரிப்பில் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.
Gemini studios
படப்பிடிப்பு என்பது ஸ்டுடியோக்களை விட்டு நிஜ லொகேஷன்களில் நடத்தப்படும் ஒன்றாக மாறியது. அதனால் அவர்கள் ஸ்டுடியோவை மூடியது ஒருவகையில் நல்லமுடிவுதான். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக துடிப்பான இதயத்தைப் போல மவுண்ட் ரோட்டில் இயங்கிக் கொண்டிருந்த ஜெமினி ஸ்டூடியோ மூடப்பட்டது 1975ல். மூடுவது ஏன் என்று கேட்ட கேள்விக்கு அற்புதமான ‘ஆசிரியரான ‘ பாலசுப்பிரமணியன் மனம் விட்டு வெளிப்படையாகச் சொன்ன பதில். ‘’ “எனக்குத் திரைப்படத் துறையில் நீந்தத் தெரியவில்லை’’ என சொன்னார்.
இப்போது ஜெமினி ஸ்டுடியோ இருந்த இடத்தில் அடுக்கு மாடி குடியிறுப்புகளும், நட்சத்திர ஓட்டல்களும் உள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…