#image_title
ஜெமினி கணேசன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பழம்பெரும் நடிகர் மற்றும் முன்னணி நடிகர் ஆவார். இவரின் இயற்பெயர் ராமசாமி கணேசன் என்பதாகும். இவரை காதல் மன்னன் என்றும் அழைத்தனர். தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்ஜிஆர்க்கு அடுத்தபடியாக போற்றப்பட்டவர் ஜெமினி கணேசன்.
காதல் திரைப்படங்களில் பலவற்றில் நடித்ததால் பிரபலமானவர் ஜெமினி கணேசன். தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஜெமினி கணேசன். 1947 ஆம் ஆண்டு மிஸ் மாலினி திரைப்படத்தில் அறிமுகமானார். 1953 ஆம் ஆண்டு தாயுள்ளம் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ஜெமினி கணேசன். 1954 ஆம் ஆண்டு மனம் போல் மாங்கல்யம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பேரும் புகழும் பெற்றார் ஜெமினி கணேசன்.
1960 களில் முன்னணி நடிகராக வலம் வந்த ஜெமினி கணேசன், பல முன்னணி கதாநாயகிகள் உடன் நடித்துள்ளார். அப்படி ஜெமினி கணேசன் உடன் அதிகம் நடித்த நடிகைகளில் ஒருவர் சரோஜாதேவி. ஒரு நேர்காணலில் சரோஜாதேவி ஜெமினி கணேசனை பற்றி கூறியிருப்பார்.
அதாவது ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் நல்ல நண்பர்களாகவே பழகி வந்துள்ளனர். 1968 ஆம் ஆண்டு வெளியான பணமா பாசமா என்ற திரைப்படத்தில் தான் ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.
அப்போது சரோஜாதேவிக்கு தமிழே பெரிதாக தெரியாதாம். அப்போது இந்த படத்திற்கான டயலாக்குகளை ஜெமினி கணேசனே சரோஜாதேவிக்கு சொல்லிக் கொடுப்பாராம். அவ்ளோ ஹெல்ப் பண்ணுவாராம் ஜெமினி கணேசன். கடைசில சரோஜாதேவிக்கு எல்லாம் டயலாக் சொல்லிவிட்டு ஷார்ட்ல அவருடைய டயலாக்கை மறந்து விடுவாராம் ஜெமினி கணேசன். இதை இருவரும் பேசி சிரிப்பார்களாம். அப்படி அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் போது சரோஜா தேவியும் ஜெமினி கணேசனும் நல்ல நண்பர்களாகவே இருந்து இருக்கின்றனர்.
பின்னர் சரோஜாதேவியின் கணவர் நோய்வாய்ப்பட்டு இறந்து போன செய்தியை கேட்டு மிகவும் மனம் நொந்து விட்டாராம் ஜெமினி கணேசன். உடனே கிளம்பி சரோஜாதேவி அவர்களின் வீட்டிற்கு சென்ற ஜெமினி கணேசன் சரோஜாதேவியை கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுது இருக்கிறார் ஜெமினி கணேசன். உனக்கு இந்த நிலைமையா இத நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கலையே என்று கூறி அழுதாரம். இதிலிருந்து சரோஜா தேவி ஜெமினி கணேசன் இருவர்களிடையே இருந்த நட்பு எவ்வளவு ஆழமானது என்பது தெரிகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…