#image_title
தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர் நடிகையர் திலகம் என அழைக்கப்பட்ட சாவித்ரி. ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார். புகழின் உச்சத்தில் இருந்தபோது சாவித்ரி, தன்னுடைய சக நடிகரான ஜெமினி கணேசனை அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தபோதும் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் ஜெமினி கணேசன், சாவித்ரிக்கும் பின்னால் மீண்டும் காதலில் விழுந்ததால் அவரின் பிரிவு நடந்தது. இதற்கிடையில் படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என பலதுறைகளில் சாவித்ரி கால்பதித்தார். ஆனால் நடிப்பு அளவுக்கு அவருக்கு மற்ற துறைகள் கைகொடுக்கவில்லை.
Gemini ganesan and Savithri
அதனால் தனது சொத்துகளை இழந்து கடைசி காலத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தார். சாவித்ரியின் குடிப் பழக்கத்தால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி இறந்தார். இதனால் சாவித்ரியின் இந்த மரணத்துக்கு ஜெமினி கணேசன்தான் காரணம் என பலரும் இப்போது வரை பேசி வருகிறார்.
இந்நிலையில் சாவித்ரி ஜெமினி கணேசன் ஜோடியின் மகளான விஜய் சாமூண்டீஸ்வரி அவருடைய ஒரு நேர்காணலில் அவரது பெற்றோர் பற்றி பலரும் அறியாத தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “என் அப்பா மேல் என் அம்மா மிகவும் அன்பாக பொசஸிவ்வாக இருந்தார். ஒருமுறை நாங்கள் சுற்றுலா சென்ற போது நாங்கள் எல்லாம் காலால் தண்ணீரை எத்தி எங்கள் அப்பா மீது தெளித்து விளையாடினோம். அதற்கே எங்க அம்மா திட்டினாங்க. அவ்ளோ காதல் எங்கப்பா மேல வச்சிருந்தாங்க.
vijaya chamundeeswari
மனிதர்கள் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நிறைவு ஏற்படனும். எங்க அம்மாவ கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறமாவது எங்கப்பா பெண்கள் விஷயத்தில ஒழுங்கா இருந்துருக்கணும். ஆனா அவர் அப்படி இல்லாமல் வேற பெண்களை தேடி போனாரு. அத எங்க அம்மாவால ஏத்துக்கவே முடியல. அதனாலதான் அவர் மேல் கோபமாகி அவர சந்திக்கவே மறுத்தாங்க. குடிப்பழக்கத்துக்கு அடிமையானாங்க. எங்கப்பா செஞ்ச தப்பு எங்கம்மா விட்டுட்டு வேறு பெண்களை தேடி சென்றதுதான். இதை அவரே ஒத்துகிட்டாரு” எனப் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததற்காக எழுந்த விமர்சனங்களுக்குப் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் தற்போது பதிலளித்துள்ளார்.…
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும், துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.…
தென்னிந்தியத் திரையுலகில் நூற்றுக்கணக்கான கலைஞர்களுக்கு வாழ்வளித்த 'வெற்றித் தயாரிப்பாளர்' ஆர்.பி. சௌத்ரி (76), மே 5 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், காரல் மார்க்ஸ் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய புரட்சி அதிமுகவின் புகழேந்தி, எடப்பாடி…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் மூத்த தலைவர் ஓ.எஸ்.…
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…