ரூ. 1 கோடி மான நஷ்ட ஈடு…. இறங்கி அடித்த திமுக… நீதிமன்றத்தை நாடிய அமைச்சர்கள்…. அக்.13-ல் வெளியாகப்போகும் பரபரப்பு தீர்ப்பு…!

Spread the love

ஏழ்மை நிலையில் உள்ள சிறுமிகளுக்கு கல்வி உதவி வழங்குவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மற்றும் அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் காவல் துறை மற்றும் அரசியல் புள்ளிகளுக்கு ரூ.70 கோடி வரை பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு விசாரணைக்குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், வீரமணிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நட்பு இருப்பதாக ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் தவெக (TVK) தொழில் நுட்பப் பிரிவினர் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த அவதூறு கருத்துக்கள் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அவதூறு பரப்பிய நபர்கள் திமுகவிற்கு ரூ.1.01 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், திமுக மற்றும் அதன் தலைவர் குறித்து வெளியிடப்பட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. புகார் கிடைத்த உடனேயே சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், தேவையின்றி திமுகவின் பெயர் இதில் இழுக்கப்படுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி அமர்வில் இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு பொறுப்பில் உள்ளவர்கள் மீது வழக்கு தொடர முன்கூட்டியே சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்பதால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார். இருப்பினும், திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அவர்கள் தனிநபர்களாகவே இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிபதி, அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

உயர்நீதிமன்றத்தின் இந்த அனுமதியை எதிர்த்து ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தற்போது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், உரிய முன்னறிவிப்பு (நோட்டீஸ்) தராமல் தாக்கல் செய்யப்பட்ட மனுவை எண்ணிடக் கூடாது என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனு வரும் அக்டோபர் 13-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை மான நஷ்ட ஈடு கோரிய வழக்கை எண்ணிடுமாறு வலியுறுத்த மாட்டோம் என திமுக தரப்பில் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த கட்டிடம்… 4 மாத கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி…. உயிருக்கு போராடும் 8 பேர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

வடகிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 4…

31 seconds ago

மேட்ரிமோனியில் வீசிய தூண்டில்… 2வது கணவருக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்த 32 வயது பெண்…. கோவையில் அதிர்ச்சி….!

கோவை மேட்ரிமோனி தளங்கள் மூலம் மறுமணம் செய்ய விரும்பும் பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைப்…

2 minutes ago

என்னை பார்த்து குரைப்பியா…? நடுரோட்டில் துடிதுடித்த தெருநாய்…. துப்பாக்கியால் சுட்டு கொன்ற நபர்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ராஜாஜிபுரம் பகுதியில், பைக் ஓட்டிச் சென்ற சீருடை அணிந்த நபர் ஒருவர் மீது அங்குள்ள…

14 minutes ago

“என்னை காப்பாற்றுங்கள்… இல்லையேல் செத்துவிடுவேன்…” தினமும் ப்ரீயா கேட்டா எங்க போவேன்….? கதறிய பானிபூரி கடைக்காரர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.…

22 minutes ago

கேள்வி கேட்க முதுகெலும்பு இருக்கா…? உங்க வீட்டு பிள்ளைகளை விடுவீங்களா…? தனுஷ், சிவகார்த்திகேயனை கிழித்த பிரபல சினிமா விமர்சகர்…!!

விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து, நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரும் அரசியல் கட்சித் தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகப் பேச்சுக்கள்…

28 minutes ago

அப்படி என்னதான் இருக்கு…? “இதய இமோஜியால் டாலரை மறைத்த த்ரிஷா…” ரசிகர்களின் கேள்விகளால் சூடேறிய சோஷியல் மீடியா…!!

நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…

37 minutes ago