தமிழக அளவில் புகழ்பெற்ற ‘ஜெம்’ கிரானைட் குழுமத்தின் தலைவரான வீரமணி, ஏழைச் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஒப்படைத்த பென்ட்ரைவில், 80 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 13 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரும் அதிர்ச்சி வீடியோக்கள் இடம்பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையிலேயே, வீடியோவில் இருந்த நபர் தொழிலதிபர் வீரமணி என்பது உறுதி செய்யப்பட்டுப் போக்சோ உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிறுமிகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்காக தேனாம்பேட்டையில் தனியாக ஒரு வீட்டினை வீரமணி வாடகைக்கு எடுத்துள்ளார். தனது கூட்டாளியான சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை அங்கு தங்கவைத்து, அவர்கள் மூலம் வறுமையில் வாடும் ஏழைச் சிறுமிகளை ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் நிற்காமல், அச்சிறுமிகளைப் பல முக்கியப் பிரபலங்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் அனுப்பிப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.
இக்கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் காவல் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இச்சோதனையில் பல முக்கியப் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றிய சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீசார், கடந்த மாதம் 8-ஆம் தேதி வீரமணியை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் உயர்மட்டப் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால், வழக்கை ஆழமாக விசாரிக்கச் சிறப்பு புலனாய்வுத் குழு (SIT) அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
வழக்கின் தீவிரத்தன்மை மற்றும் குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சிறையில் இருக்கும் வீரமணி மீது சென்னை மாநகரக் காவல் துறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தகவலோ அல்லது புகார்களோ உள்ள பொதுமக்கள் காவல் துறையைத் தொடர்பு கொள்ள சிறப்புச் செல்போன் எண்ணையும் (9345319676) காவல் துறை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதுவரை வீரமணி மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பொதுமக்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், தற்போது திருவண்ணாமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சிறப்பு புலனாய்வுத் குழுவிடம் வீரமணிக்கு எதிராகப் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரிலும் தற்போது தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகளை நடத்தி ஆதாரங்களைச் சேகரித்து வரும் சிறப்பு புலனாய்வுத் குழுவினர், விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…