இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வலுவான ராஜதந்திர உறவின் காரணமாக, ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மேற்காசியப் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், ‘புஷ்பக்’ மற்றும் ‘பரிமல்’ ஆகிய இரு இந்திய டேங்கர் கப்பல்கள் இந்த வழியாகப் பாதுகாப்பாகப் பயணிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அனுமதியின் மூலம் இந்தியாவுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் நிலவி வந்த கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த அச்சங்கள் நீங்கியுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கப்பல்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு மட்டும் கிடைத்துள்ள இந்தச் சலுகை இந்தியாவின் வெளியுறவு கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…