கேரள மாநிலம் கொச்சி வைப்பின் பகுதியில், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் உள்ளூர் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற ஞாரக்கல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜித்தின் மற்றும் காவலர் ராஜேஷ் ஆகிய இருவர் கத்தியால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாக உள்ள முன்னா என்பவன் தலைமையிலான கும்பல், பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதுடன், அங்குப் பாதுகாப்புப் பணியாக வந்த காவல்துறையினர் மீதும் திடீரெனத் தாக்குதல் நடத்திவிட்டுக் கத்தியால் குத்தியுள்ளது. படுகாயமடைந்த இரண்டு அதிகாரிகளும் உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய முண்ணா மற்றும் அவனது கூட்டாளிகளை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெர்மியா சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டடத்தில் எதிர்பாராதவிதமாக திடீர் வெடிப்புச்…
புதுச்சேரி குருமாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழ், அவரது மனைவி குணாவதி மற்றும் 8 வயது மகன் கீர்த்தன் குருபரன் ஆகியோர்,…
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே, தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த 26 வயதான உத்திரா மர்மமான முறையில் மாயமான…
பெற்ற தாயால் கைவிடப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்ந்த சிறுவன் ஒருவன், அங்கு ஏற்பட்ட கொடூரச் சித்திரவதைகளிலிருந்து தப்பியோட முயன்றபோது, அவர்…
உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது ஸ்கார்பியோ கார் ஒன்று நடுரோட்டில் ஆபத்தான சாகசங்களைச் செய்து பொதுமக்களை…
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நிக் ப்ரோடெரிக் மற்றும் ஈவா ப்ரோடெரிக் தம்பதியினர், வனப்பகுதி ஒன்றில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தபோது திடீரென…