#image_title
கானா உலகநாதன் கர்நாடக இசை மேற்கத்திய இசை என இசையின் பரிணாமங்களை கற்று தேர்ந்தவர். கானாவை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியவர்களில் இவரும் ஒருவர். வசந்தகுமார் இயக்கத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான மச்சி படத்தில் இடம் பெற்ற கும்மாங்கோ பாடல் மூலம் கானா உலகநாதன் திரை உலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
இதனை அடுத்து சித்திரம் பேசுதடி படத்தில் இடம் பெற்ற வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் மூலம் கானா உலகநாதன் பிரபலமானார். இந்த பாடலில் நடிகை மாளவிகாவின் நடனமும் அற்புதமாக இருக்கும். வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் என்ற பாடல் மிஷ்கினின் முதல் படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்தது. இந்த நிலையில் கானா உலகநாதன் சித்ரா லட்சுமணன் உடனான ஒரு பேட்டியில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது, ஒரு பத்திரிகையில் எனக்கும் மாளவிகாக்கும் தொடர்பு இருக்குன்னு எழுதிட்டாங்க. அந்த பாடல் ஷூட்டிங் நடந்தபோது கூட நான் தனியா உக்காந்து இருப்பேன். அவங்க தனியா உட்கார்ந்து இருப்பாங்க. அப்போது மாளவிகா என்ன பார்த்து நீங்க ஊர் நாட்டாமையா? ஜுவல்ஸ் எல்லாம் போட்டுட்டு உட்கார்ந்து இருக்கீங்க அப்படின்னு கிண்டல் பண்ணுவாங்க. அப்போ என் அசிஸ்டன்ட் அண்ணே நீங்களும் கலாய்ச்சு விடுங்க அப்படின்னு என்கிட்ட சொல்லுவான்.
நாங்க ஜாலியா தான் பேசிட்டு இருப்போம். தினகரனில் சீனி கற்கண்டு அப்படின்னு ஒரு புக்கு இருக்கும். அந்த புக்ல கிசுகிசு பக்கத்துல எனக்கும் மாளவிகாக்கும் தொடர்பு இருக்கு அப்படின்னு எழுதிட்டாங்க. இன்னொருத்தர் சொல்லி தான் அந்த விசயம் எனக்கு தெரிஞ்சுச்சு. உடனே நான் தினகரன் ஆபீஸ்க்கு போய் கேட்டேன். அப்போ அவங்க எங்களுக்கு இப்படி போட்டா தான் சார் வியாபாரம் ஆகும் அப்படின்னு சொல்லிட்டாங்க என ஓப்பனாக பேசி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…