தைரியம் இருக்கா?…. “நிரூபிச்சா 5,000 கோடி தரேன்”…. சபரீசன் விவகாரத்தில் கொந்தளித்த ஜி ஸ்கொயர் நிறுவனர்…. சட்டமன்றத்தில் அதிர்ச்சி…!

Spread the love

தமிழக சட்டமன்றத்தின் மானியக் கோரிக்கை கூட்டத்தொடரில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசார விவாதம் வெடித்துள்ளது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், கோவையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மனைப்பிரிவு அமைப்பதற்காகப் பாறைகளை உடைத்து, வனவிலங்குகளுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், ஆனால் அதன்மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “ஒரு தனியார் நிறுவனத்தைப் பற்றிப் பேசினால் திமுக உறுப்பினர்கள் ஏன் கொந்தளிக்கிறார்கள்?” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியது பேரவையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைதளங்களில் தவெகவினர் மற்றும் எதிர்க்கட்சியினர், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் முன்னாள் முதலமைச்சரின் மருமகன் சபரீசனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். 2025-ஆம் ஆண்டு பரந்தூரில் புதிய விமான நிலையம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அப்பகுதியில் ஜி ஸ்கொயர் நிறுவனம் 900 ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டதாகப் பரப்பப்பட்ட வதந்திகள் உட்படப் பல குற்றச்சாட்டுகளை அவர்கள் முன்வைத்தனர். இதன் பின்னணியில் திமுக அரசு செயல்படுவதாகக் கூறி அரசியல் களம் சூடானது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஜி ஸ்கொயர் நிறுவன நிறுவனர் பாலா ஜெயராமன், அனைத்து விமர்சனங்களையும் முற்றிலுமாக மறுத்துள்ளார். சபரீசனைத் தாம் இரு முறை மட்டுமே சந்தித்திருப்பதாகவும், அவருக்கும் தமது நிறுவனத்திற்கும் எந்தவிதமான வணிகத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், “சபரீசனுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதை யாராவது நிரூபித்தால், ரூ. 10,000 கோடி மதிப்புள்ள என் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை (ரூ. 5,000 கோடி) இலவசமாக எழுதித் தருகிறேன்” என்று பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ஊடகங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குத் தங்கள் பட்ஜெட்டுக்கு உட்பட்டு விளம்பர ஆதரவு மட்டுமே தருவதாகவும், அதில் விருந்தினர்களாகப் பங்கேற்கும் சபரீசன் போன்றவர்களை வைத்துத் தவறான கதைகளைப் புனையக் கூடாது என்றும் கூறினார். திமுகவுடன் தம்மைத் தொடர்புபடுத்திப் பேசுவது, தம் நிறுவனத்தின் அனுமதிகளை முடக்கும் உள்நோக்கம் கொண்டது என்றும், ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…

5 minutes ago

“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…

7 minutes ago

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

15 minutes ago

“கனவாக மாறிய 10 வருட காதல்…” வேலை கிடைத்த திமிரில் காதலியை தூக்கி எறிந்த வாலிபர்…. இளம்பெண்ணின் முடிவால் கதறும் குடும்பத்தினர்… பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…

29 minutes ago

பெற்ற தாய் செய்யுற வேலையா இது…? சிறுமி மீது கைவைத்த கள்ளக்காதலன்…. மகள் அழுதும் கேட்காத தாய்… நெஞ்சை ரணமாக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

38 minutes ago