தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான அர்ச்சகர், ஓதுவார், வேதசிவாகம பாடசாலை மற்றும் தவில் இசைப் பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓராண்டு கால அர்ச்சகர் பயிற்சி மற்றும் ஓதுவார் பயிற்சிக்கு (முழுநேரம் 3 ஆண்டுகள் / பகுதிநேரம் 4 ஆண்டுகள்) 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், 14 முதல் 24 வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 5 ஆண்டுகள் கொண்ட வேதசிவாகம பாடசாலைக்கு 5-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 12 முதல் 16 வயதும், 3 ஆண்டுகள் கொண்ட தவில் இசைப் பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 13 முதல் 16 வயதும் இருக்க வேண்டும். இப்பயிற்சிகளில் சேரும் மாணவர்களுக்கு முழுநேரப் படிப்புக்கு மாதம் ரூ.10,000 மற்றும் பகுதிநேரப் படிப்புக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுவதோடு, பயிற்சி காலம் முழுவதும் இலவச உணவு, உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் முழுமையாகக் கற்றுத்தரப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன்பெற விரும்பும் தகுதியான மாணவர்கள், palanimurugan.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, “இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி – 624601” என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 6383031350 மற்றும் 9942111960 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு முழுமையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீகப் பணியில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ளலாம்.
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…