2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகிகள் மாற்றுக்கட்சிகளுக்குத் தாவுவது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தவெகவின் திமிரி கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் வெங்கடேசன், தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். ஆற்காடு தொகுதி அதிமுக வேட்பாளர் S.M.சுகுமார் முன்னிலையில் இந்த இணைவு நடைபெற்றுள்ளது, அந்தத் தொகுதியில் அதிமுகவின் பலத்தை அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், தவெக நிர்வாகிகள் சிலர் அடுத்தடுத்து திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்குத் தாவி வருகின்றனர். புதிய கட்சியாகத் தேர்தலைச் சந்திக்கும் தவெகவிற்கு, அடிமட்ட அளவிலான நிர்வாகிகள் இவ்வாறு விலகிச் செல்வது அக்கட்சித் தலைமைக்குப் பெரும் பின்னடைவாகவும், அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிகழும் இந்த அரசியல் மாற்றங்கள் தமிழக தேர்தல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…
இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருப்பதாகக் கூறிச்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம் தாய் விபத்தில் சிக்கி உயிரிழந்த…