அரசியல் களத்தில் நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். முன்னதாக ஓபிஎஸ் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அவர், திமுகவில் இணையப்போவதாக இன்று காலை முதல் பரவலாகச் செய்திகள் வெளியாயின. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருடைய ஆதரவாளரான வெல்லமண்டி நடராஜனும் அதே பாதையைத் தேர்ந்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த அவர், தனது அரசியல் பயணத்தைத் தாய் கழகத்திலேயே தொடர முடிவெடுத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், “ஜெயலலிதாவால் அரசியலில் அடையாளம் காட்டப்பட்ட எனக்கு, திமுகவுக்குச் செல்ல மனம் இடங்கொடுக்கவில்லை” என உருக்கமாகத் தெரிவித்தார்.
மேலும் கட்சியின் கொள்கை மற்றும் விசுவாசமே முக்கியம் என்பதைத் தெளிவுபடுத்திய அவருக்கு, எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தார். ஓபிஎஸ் தரப்பிலிருந்து முக்கியமான நிர்வாகிகள் விலகி வருவது, அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சியின் ஒருமைப்பாட்டை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…