BREAKING: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காலமானார்… அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

Spread the love
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், குளித்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெள்ளியணை ராமநாதன் (91) உடல்நலக்குறைவால் காலமானார். 1957-ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வெற்றி பெற்றிருந்த நிலையில், 1962-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தனது 26-வது வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி, அப்போதைய இளம் எம்.எல்.ஏ-க்களில் ஒருவராகப் பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த இவரது மறைவு அக்கட்சிக்கும், அப்பகுதி மக்களுக்கும் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. இவரது மறைவுக்குத் திருச்சி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். வெள்ளியணை ராமநாதனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
Soundarya

Recent Posts

என்னது… வெறும் 1 கி.மீ. வேகத்துக்கு ரூ 2,000 அபராதமா?… அதுவும் நடுக்கடல்லயா?… போலீஸிடம் கேள்வி எழுப்பிய ஓட்டுநர்… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

யமுனா விரைவுச் சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வெறும் 1 கி.மீ. வேகமாகச் சென்றதற்காக ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டதோடு, வாகனத்தின்…

10 minutes ago

BREAKING: முன்னாள் நீதிபதி C.S. கர்ணன் காலமானார்… விசிக ஆழ்ந்த இரங்கல்…!

முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் (71) மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உடல்நலக் குறைவு காரணமாகச்…

14 minutes ago

ஐயோ கொடுமையே… ஒரே வீட்டில் 3 குழந்தைகள் மர்ம மரணம்… பின்னணியில் நடந்தது என்ன?… உ . பி – யில் அரங்கேறிய பெரும் சோகம்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் 72 மணி நேரத்திற்குள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்…

22 minutes ago

ஐயோ… காட்டு வழியில் 12 வயது சிறுமியைக் கடத்தி வன்கொடுமை… போலீஸ் விரட்டியதில் கால் உடைந்து… சிக்கிய 26 வயது வாலிபர்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9…

36 minutes ago

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… மகளிர் உரிமைத் தொகை நாளை வர வாய்ப்பு…!

மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…

39 minutes ago

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

1 மணத்தியாலம் ago