தமிழக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த திமுக – அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துப் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் தொடர் வெற்றிகளைப் பெற்று வரலாற்று சாதனை படைத்த அதிமுக, இந்த தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அதிமுகவில் எதிர்காலம் இல்லை எனக் கருதிய பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தவெகவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில், அதிமுகவின் மாஜி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கொத்து கொத்தாக மாற்றுக் முகாமிற்குப் பல்டி அடித்தனர். இதில் குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையின் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் கடலூர் தொகுதியின் முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் பனையூர் வாசலில் நீண்ட நேரம் காத்திருந்து தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இருப்பினும், முன்கூட்டியே சென்றால் முக்கிய பதவிகளைக் கைப்பற்றிவிடலாம் என்று திட்டம் போட்ட முன்னாள் அமைச்சர்களுக்குத் தவெக தலைமை அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. தங்களின் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், மரகம் குமரவேல், இசக்கி சுப்பையா போன்றோருக்குத் தவெக தலைவர் விஜய் உடனடியாக அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகளை வழங்கி உத்தரவிட்டார். ஆனால், முதல் ஆளாகக் கட்சி மாறிய கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், உடுமலை ராதாகிருஷ்ணன், சிவபதி, எம்.எஸ்.எம். ஆனந்த் போன்றோருக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை.
கட்சியில் இணைந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை தவெக தலைவர் விஜய்யைச் சந்திக்க அனுமதி கிடைக்காததால், முன்னாள் அமைச்சர்கள் மிகுந்த வேதனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சி நிகழ்வுகளிலும் பங்கேற்க அழைப்பு இல்லாததால் வீடுகளிலேயே முடங்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ள இவர்கள், அவசரப்பட்டு அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து தவறான முடிவை எடுத்துவிட்டோமா எனத் தங்களது ஆதரவாளர்களிடம் புலம்பி வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…