அடுத்த அதிரடி… கட்சிகள் இணைந்த கையோடு செங்கோட்டையனுக்கு விஜய் கொடுத்த முதல் டாஸ்க்… பரபரக்கும் அரசியல் களம்…!

Spread the love

அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். அவருடைய சொந்த மாவட்டமான ஈரோட்டில் கட்சி பதவியில் இருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்களை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்தார். இதனால் கடும் அதிருப்திக்கு உள்ளான செங்கோட்டையன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் மூலம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் மௌனம் காத்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் மொத்தமாக செங்கோட்டையனின் பதவியும் அவருடைய ஆதரவாளர்கள் பதவியும் பறிக்கப்பட்டு கட்சியிலிருந்து அடியோடு நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் தொடர்ந்து மௌனம் காத்து வந்த செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளார்.  இந்நிலையில் கட்சியில் இணைந்த கையோடு செங்கோட்டையனுக்கு சில முக்கியமான பணி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், செங்கோட்டையனுக்கு தனிப்பட்ட முறையில் அளித்துள்ள முதல் பணி, தமிழகம் முழுவதும் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே ஆகும் எனக் கூறப்படுகிறது.

செங்கோட்டையன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குறிப்பாக அதிமுகவின் பலம் வாய்ந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் இடையே பேசி அவர்களை விஜயின் கட்சிக்கு அழைத்து வரவேண்டும் என்பதை இதன் நோக்கமாகும். அதிமுகவில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றிய அனுபவமும் பல தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பும் கொண்டவர் என்பதால் செங்கோட்டையன் இந்த பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பார் என தமிழக வெற்றி கழகம் தலைமை நம்புகின்றது. செங்கோட்டையனின் வருகை தற்போது விஜய்க்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது.

செங்கோட்டையனின் இந்த நகர்வு அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்களையும் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையின் மீதான அதிருத்தியையும் வெளிப்படையாக்கியுள்ளது. தற்போது செங்கோட்டையன் மூலமாக மேலும் பல முக்கிய நிர்வாகிகள் விஜய் கட்சியை நோக்கி நகர்ந்தால் அதிமுகவின் வாக்கு வங்கியும் அப்படியே சில்லு சிறிதாக நொறுங்க வாய்ப்புள்ளது. அதேசமயம் பாஜக கூட்டணியில் அதிருப்தியில் இருப்பவர்கள் பலரும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Nanthini

Recent Posts

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

11 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

16 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

24 minutes ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

34 minutes ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

42 minutes ago

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

1 மணத்தியாலம் ago