சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறகின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களையும் வணிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு டன் ரூ.6,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த விறகு, தற்போது ரூ.8,000 ஆக அதிகரித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக விறகுக்கான தேவை திடீரென அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்விற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தற்போது வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எரிவாயு குடோன்களில் போதிய இருப்பு இல்லாததால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்குச் சிலிண்டர்கள் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. இந்த இக்கட்டான சூழலால், சமையல் எரிவாயுவை நம்பியிருந்த ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் டீக்கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. இது அந்தந்தப் பகுதி மக்களின் அன்றாட உணவுக் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க வழியில்லாத பல ஹோட்டல் உரிமையாளர்கள், தற்போது மீண்டும் பாரம்பரிய விறகு அடுப்பு முறைக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு பலரும் ஒரே நேரத்தில் விறகை நாடுவதால், சந்தையில் விறகுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையும் எகிறியுள்ளது. சமையல் சிலிண்டர் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டால் ஏற்கனவே நலிவடைந்துள்ள உணவகத் தொழில், தற்போது விறகு விலை உயர்வால் மேலும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…