தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைச் சிறந்த தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை” (AABCS) அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு மொத்த திட்ட மதிப்பீட்டில் 35% அல்லது அதிகபட்சமாக 1.5 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த பல்வேறு தொழில்களுக்குக் கடனுதவி வழங்கப்படுவதுடன், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் முழுவதும் 6% வட்டி மானியமும் அளிக்கப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இத்திட்டத்தில் பயன்பெற 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திட்டத் தொகையில் 65% வங்கிக் கடனாகவும், எஞ்சிய 35% அரசின் மானியமாகவும் வழங்கப்படுவதால், பயனாளிகள் தங்கள் கைக்காசை முதலீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆர்வம் உள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம். அரிசி ஆலை, அழகு நிலையம், வாடகை கார் எனப் பல தொழில்களுக்கு இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையலாம்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…