Categories: சினிமா

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் மாஸ் நடிகர்களின் படங்கள்… எல்லாரும் ரெடியா இருங்கப்பா..!!

Spread the love

தீபாவளி பொங்கல் என்றாலே முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4 புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளிக்கு எத்தனை படங்கள் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்பது கூடிய விரைவில் தெரியவரும். இப்போது வந்த தகவலின் அடிப்படையில் தீபாவளியை முன்னிட்டு அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.hindutamil.in%2Fnews%2Fcinema%2Ftamil-cinema%2F1062335-kanguva-first-look-poster.html&psig=AOvVaw2-YmSAlcCr2cduwVLyvs6c&ust=1717858187575000&source=images&cd=vfe&opi=89978449&ved=0CBEQjRxqFwoTCLiOkO7eyYYDFQAAAAAdAAAAABAD

கடந்த வருடமே விடாமுயற்சி படம் குறித்த தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்த சிக்கல்கள் காரணமாக ஷூட்டிங் தள்ளி போனது. அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். இந்த படத்தில் திரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. மாபெரும் பொருட் செலவில் கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் ரிலீஸ் ஆகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்ஐசி படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக கவின் நடித்துள்ள கிஸ் படத்தையும் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். மேற்கூறிய படங்களில் அஜித்தின் விடாமுயற்சி படமும் சூர்யாவின் கங்குவா படமும் மாஸ் நடிகர்களின் படங்கள். இதனால் அனைத்து தியேட்டர்களிலும் இந்த இரண்டு படங்கள் ஹவுஸ்புல் ஆகிவிடும்.

இதனால் எல்ஐசி படத்தையும் கிஸ் படத்தையும் தீபாவளிக்கு முன்னரோ அல்லது தீபாவளி முடிந்தோ ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஒரே நேரத்தில் விடாமுயற்சி, கங்குவா படங்களுடன் இணைந்து எல்ஐசி, கிஸ் ஆகிய படங்களை ரிலீஸ் செய்வார்களா? கடைசி நேரத்தில் பின் வாங்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இன்னும் தீபாவளிக்கு ஐந்து மாதங்கள் இருப்பதால் மேற்கொண்டு எத்தனை படங்கள் இந்த லிஸ்டில் இணையும் என்பது இனிமேல் தான் தெரியவரும்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

10 minutes ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

13 minutes ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

2 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

2 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 மணத்தியாலங்கள் ago