மௌனம் பேசியதே’ முதல் ’96’ வரை.. த்ரிஷாவுக்காகவே பார்க்க தூண்டும் 7 படங்கள்..
Spread the love
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் போல் 25 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக வலம் வரும் மகா நடிகை தான் “திரிஷா”. இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் அழகுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள். இவர் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்தில் மிக யாரும் பண்ணாத அளவிற்கு வேறுபட்டும் ரொம்ப வித்தியாசமான முறையில் இருக்கும். வித்தியாச கதைகளத்தில் வரும் கதாபாத்திரத்தையே இவர் தேர்ந்தெடுப்பார், அது மட்டும் இன்றி இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் இவர் கேரக்டர் அப்படியே உள்வாங்கி சினிமாவுக்கும், ரசிக்கும் ரசிகர்களுக்கும் என்ன வேண்டுமோ அதை தத்ரூபமாக வெளிக் கொண்டு வந்து மக்கள் அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்குவார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை த்ரிஷாவுக்கு என்று ஓடிய படங்கள் பல உண்டு,
அதில் முக்கியமாக 2002 ஆம் ஆண்டு யூனிக்கான இயக்குனர் அமீர் அவர்களின் இயக்கத்தில் சூர்யா நடிப்பு ஹீரோயினாக திரிஷா அவர்கள் நடித்து வெளிவந்து தமிழ் சினிமாவின் பார்வையே மாற்றிய படம் மௌனம் பேசியது, இப்படத்தில் சூர்யாவின் ஒரு முற்போக்குத்தனமான பகுத்தறிவு மிக்க ஒரு கேரக்டரை, காதலை கண்டு தெருச்சியோடும், சூர்யா அவர்களை தன் அசாத்தியமான அறிவுத்திறனோடு செயல்பட்டு காதலின் அற்புதத்தை சூர்யா அவர்களுக்கு புரிய வைக்கும் விதமாக த்ரிஷா அவர்கள் மிக தத்துவமாக நடித்திருப்பார். சூர்யாவுக்கு எவ்வளவு ரசிகர்கள் உள்ளார்களோ அந்த அளவிற்கு திரிஷா அவர்களுக்கும் இப்படத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.
2019 கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் காதலே உருகும் அளவிற்கு உருவாக்கி இயக்கிய படம் தான் “விண்ணைத்தாண்டி வருவாயா”, இப்படத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குடும்பத்தை தாண்டி சிம்பு திரிஷாவும் தங்கள் காதல் சேராமல் இருந்தும், தன் காதலை மறக்காமல் காதல் காகவே வாழ்ந்து வாழ்வை முடிக்கும் அளவிற்கு படத்தில் திரிஷா தன் நடிப்பு திறமை வெளிகாட்டி இருப்பார்கள்.
மோகன் ராஜா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த வெளியான படம் தான் “சம்திங் சம்திங்”, இப்படத்தில் மிகவும் சுட்டித்தனமான ஒரு குழந்தை போல் நடித்திருப்பார். இதில் அண்ணன் அவர்களுக்கு காக காதலியே வேண்டாம் என்று தூக்கி எறிந்து இருப்பார், ஆனால் இந்த காதல் இவரை விடாது என்பதால் அதன் பின் அண்ணன் சம்மதத்தோடு இந்த காதலனை நாகரீகமாக அணுகிருப்பார், இப்ப படத்தைப் பார்த்த எவரும் த்ரிஷா அவர்களின் கதாபாத்திரத்தை மறக்கவே முடியாத அளவிற்கு அமைந்திருக்கும்.
2008 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் தன் பெண் குழந்தையின் மேல் இருக்கும் காதலால், மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் தன்னை விட்டுப் போய் விடுவார் என்பதற்காக தன் மகளையும் விட முடியாமல் தன் மகளின் வாழ்க்கையையும் தொந்தரவு செய்யாமல் தவிக்கும் அந்த அப்பாவின் குணத்தை புரிந்து அப்பாவின் மனம் நோகாமல் காதலனை கைவிடாமல் உறவுகளையும் தாங்கி பிடித்தபடி நடித்திருப்பார், திரிஷா அப்ப படம் தான் “அபியும் நானும்”.
விஜய் திரிஷா காம்போ என்றாலே குதுகலத்தில் ஆழ்வார்கள். அப்படி இவர்களின் காம்போவில் உருவாகி ரசிகர்களை கவர செய்த படம் தான் “கில்லி”, இப்படத்தில் திரிஷா அவர்கள் காக விஜய் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்த திருஷா படத்தின் இறுதியில் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு காதலுக்காக விஜய் தேடி வந்திருப்பார்.
கௌதம் வாசுதேவ் மேனன் படைத்த படைப்புதான் “என்னை அறிந்தால்” இப்படத்தில் விதவையாக நடித்திருக்கும் திரிஷா அவர்களுக்கு கணவன் இழந்த பிறகும் வாழ்க்கை உண்டு என்பதை இப்படத்தில் அஜித்தின் காதல் மூலம் திரிஷா அவர்கள் உடன் இணைந்து காதலின் ரசத்தை வெளிக்கொண்டு வந்திருப்பார் திரிஷா.
2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி திரிஷா நடிப்பது வெளியான “96”, பல ஆண்டுகளுக்குப் பிறகு திரிஷா அவர்கள் அதிரடி படங்களை விட்டு விட்டு காதலுக்காகவே உருவாக்கிய படம் 96, இப்படத்தில் தன் காதலன் ராம் பிரிந்து சென்று திருமணம் ஆகியும் காதலனை மறக்க முடியாமல் மீண்டும் சந்தித்த பொழுது இந்த காதலின் மூலம் எந்த தவறும் செய்யாமல் இந்த உன்னதமான காதலை அருமையாக கையாண் டு படத்தில் வெளி கொண்டு வந்திருப்பார்.