ஹோட்டல் நடத்தி சம்பாதிக்கும் சினிமா பிரபலங்கள் யாரெல்லாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பிரபலமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பிறகு விஜய் டிவியின் பக்கம் வந்து “கல்யாணம் முதல் காதல் வரை “என்ற தொடரில் ஹீரோயினாக நடித்த ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதன் பிறகு தற்போது வெள்ளித்திரையில் முழு நேரமும் நடிப்பது மட்டுமே தொழிலாக வைத்துள்ளார். மேயாத மான் படத்தில் தொடங்கிய அவருடைய சினிமா பயணமானது கடைக்குட்டி சிங்கம், யானை, ஓ மணபெண்ணே, திருச்சிற்றம்பலம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சென்னையில் லயம்ஸ் டின்னர் என்ற உணவகத்தை தொடங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் சிம்ரன். இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்தபோது திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார். பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தார். அதனை தொடர்ந்து விக்கிரமிற்கு ஜோடியாக மகான் என்ற படத்தில் நடித்தார். தற்போது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் படத்தில் நடித்துள்ளார். இவர் சென்னை சோழிங்கநல்லூரில் Goda By Simran என்ற உணவகத்தை நடத்தியுள்ளார்.
சின்னத்திரையிலும் சரி, வெள்ளித்திரையிலும் தீபாவளி, வின்னர் போன்ற படங்களிலும் சில நிமிடம் தலைகாட்டி வந்தவர் தான் பிரபல காமெடி நடிகர் சூரி. இவர் முதன்முதலாக ஒரே ஒரு பரோட்டா காட்சி மூலம் பல வருடங்கள் பேச வைக்கும் அளவிற்கு மாறி இப்போதும் பரோட்டா சூரி என்று கொண்டாடப்பட்டு வருகிறார். கஷ்டப்பட்டு சாதிக்க துடித்த இவருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு தான் வெண்ணிலா கபடி குழு. அங்கு ஆரம்பித்த இவருடைய பயணம் ரஜினி, சூர்யா, அஜித்,சிவ கார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களோடு படங்களின் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மதுரையில் இவருக்கு சொந்தமாக அம்மன் உணவகம் இயங்கி வருகிறது.
தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான நந்தா திரைப்படம் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் கருணாஸ்.அந்த திரைப்படத்தில் ஒடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.லொடுக்கு பாண்டி கதாபாத்திரம் இவருக்கென தனி ஒரு அடையாளமாக மாறிவிட்டது. இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி, சிம்புவின் குத்து மற்றும் அஜித் உடன் இணைந்து வில்லன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இவர் தன்னுடைய மனைவியுடன் இணைந்து ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜீவா.இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதன்படி ராம்,கற்றது தமிழ் மற்றும் சிவா மனசுல சக்தி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. கடைசியாக பிளாக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவருக்கு சொந்தமாக ஒன் எம்பி என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் ஆர்யா. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான காதர் பாட்ஷா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் ஷூ ஷெல் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…