“உங்க அப்பா என்கிட்ட தினமும்” கதறிய மனைவி.. வாயை மூடச் சொன்ன கணவன்.. துப்பாக்கி முனையில் மருமகளை மாமனார் செய்த் கேவலம்… தட்டிக்கேட்டதற்கு ‘முத்தலாக்’ கொடுத்த கொடூரம்..!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில், மாமனார் ஒருவரே தனது மருமகளைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லக்னோவைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இப்பெண், கடந்த 2023-ஆம் ஆண்டு முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்துகொண்டு கணவர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்த நிலையில், கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த சமயத்தில், மாமனார் நாட்டுத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இப்பெண்ணைத் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.

இந்தக் கொடூரம் குறித்து மிகுந்த மனஉளைச்சலுடன் தனது கணவரிடம் முறையிட்டபோது, அவரோ மனைவியைத் தேற்றுவதற்குப் பதிலாக, “இதைப் பற்றி யாரிடமும் பேசக்கூடாது” என மிரட்டி மௌனமாக இருக்கச் செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் மீண்டும் மாமனார் அத்துமீறியபோது இப்பெண் சத்தம் போட்டுள்ளார்; ஆனால், ஓடிவந்த மாமியார், மைத்துனர் மற்றும் நாத்தனார் ஆகியோர் அந்தப் பெண்ணைக் காப்பாற்றாமல், அவரே குற்றவாளி என்பது போலத் தாக்கியுள்ளனர். இதனால் தப்பிக்க வழியின்றிப் பெற்றோர் வீட்டிற்குத் திரும்பிய அந்தப் பெண்ணை, கணவர் தொலைபேசி மூலமாக ‘முத்தலாக்’ கூறி உறவையும் முறித்துக் கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கணவர், மாமனார் உட்படக் குடும்பத்தினர் 5 பேர் மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே நேரத்தில், தன் மனைவிக்கு வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அந்தத் தகராறில் தான் இப்படிப் புகார் அளிப்பதாகவும் கணவர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில், “விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, உண்மை நிலவரத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

8 வயது சிறுமி எங்கே?… சிசிடிவியில் சிக்கியதா க்ளூ?… துர்கா பூஜைக்குச் சென்ற தாய்… 3 நாட்களாகத் தொடரும் மர்மம்… தீவிர தேடுதல் வேட்டை…!!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர், கணவரைப் பிரிந்து தனது பெற்றோர் மற்றும் 8 வயது மகளுடன் காஞ்சிபுரம் மாவட்டம்…

43 minutes ago

ஒரு நொடி கவனக்குறைவு… செல்ஃபி ஆசை… எமனாக வந்த லாரி… 4 உயிர்களைப் பறித்த விபரீதம்… கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி அருகே உள்ள சிவ்புரியைச் சேர்ந்த ஏழு நண்பர்கள், மிர்சாபூரில் உள்ள விந்தியாச்சல் கோயிலுக்குச் சென்று…

51 minutes ago

அடகடவுளே..! மன உளைச்சலா?… “அப்பா படம் பார்க்க கூட்டிட்டு போறாரு”… துள்ளிக்குதித்து காரில் ஏறிய பிஞ்சுகள்… நடுவழியில் நேர்ந்த பயங்கரம்…!!

மத்திய பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் தாக்கட் என்பவர் வருவாய்த் துறையில் அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.…

58 minutes ago

பாதுகாப்பு எங்கே?… 16 வயது சிறுமியின் உயிரைப் பறித்த கொடூரம்… முட்புதரில் கிடந்த சடலம்… பிஞ்சு வயதில் பறிபோன உயிர்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த 16 வயதுடைய 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், தனது உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில்…

1 மணத்தியாலம் ago

“97 லட்சம் வாக்காளர் நீக்கம்: திமுக தான் முழுப் பொறுப்பு”…. மொத்த ஊழலையும் புட்டு புட்டு வைத்த வைகோ…. அடுத்த பரபரப்பு….!

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக அரசியலில் பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து தனது…

1 மணத்தியாலம் ago

எல்லை மீறிய காட்சி?… தேவதர்ஷினியா இது?!… இணையத்தை அதிர வைத்த வீடியோ… தீயாய் பரவும் சர்ச்சை… வைரலாகும் அதிர்ச்சி உண்மை…!!

திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் பல ஆண்டுகளாகக் குடும்பப் பாங்கான மற்றும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை தேவதர்ஷினி, அண்மையில்…

1 மணத்தியாலம் ago