கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சரணப்பா என்ற கூலி தொழிலாளி வசித்துவரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஹேமந்த், பார்கவ்(3) என்ற இரண்டு மகன்களும், சான்வி(5) என்ற மகளும் இருந்தனர். இதனிடையே சரணம் பா தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் வந்ததால் அவருடன் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். மூன்று குழந்தைகளும் தனக்கு பிறக்கவில்லை என்று கூறி மனைவியை கொடுமைப்படுத்தி உள்ளார். சரணப்பாவின் சித்திரவதை அதிகமானதால் அவருடைய மனைவி கலந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்துக் கொண்டு மூன்று குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
சரணப்பாவும் அவரை அழைத்து வராமல் அப்படியே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சரணப்பா, தன் மாமியார் வீட்டுக்குச் சென்று மனைவியை சமாதானம் செய்து அவரையும் குழந்தைகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு மீண்டும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்துள்ளார். அப்போது மூன்று குழந்தைகளும் தனக்கு பிறக்கவில்லை என்றும் யாருக்கு பிறந்தது என கேட்டு மனைவியை சித்திரவதை செய்துள்ளார்.
பிறகு அனைவருமே இரவு தூங்கிவிட்ட நிலையில் காலையில் எழுந்து சரணப்பாவின் மனைவி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார். மூன்று குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் சரணப்பா வீட்டிலிருந்த கோடாரியை எடுத்து பிஞ்சு குழந்தைகள் என்றும் பார்க்காமல் சரமாரியாக வெட்டினார். அதில் பலத்த காயமடைந்த குழந்தைகள் வலியால் அலறி துடித்த நிலையில் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அங்கு பார்த்தபோது சான்வீ மற்றும் பார்கவ் இருவரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன.
ஹேமந்த் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். வீட்டுக்கு வந்த சரணப்பா மனைவி குழந்தைகளை கண்டு கதறி அழுதார். மருத்துவமனையில் இருக்கும் குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள சரணப்பாவை வலை வீசி தேடி வருகிறார்கள்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…