ஜம்முவில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண விழாவில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்முவைச் சேர்ந்த 63 வயதான கமல் சிங் ஜம்வால் என்பவர், ஃபரூக் அப்துல்லாவை நோக்கித் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இலக்கு தவறியதால் அவர் உயிர் தப்பினார். உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில், கமல் சிங் ஜம்வால் பின்னால் இருந்து ஃபரூக் அப்துல்லாவை நெருங்கித் துப்பாக்கியை நீட்டுவதும், ஒரு முறை சுடுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் ஜம்மு காஷ்மீர் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முக்கியத் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…