மும்பை அந்தேரி கிழக்குப் பகுதியில் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் ராஜ்குமார் கந்தசாமி என்பவரது அலுவலகத்திற்குள் கடந்த ஜூலை மாதம் புகுந்த 9 பேர் கொண்ட கும்பல், தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு சோதனை நடத்துவது போல் நாடகமாடியுள்ளது. ஊழியர்களின் செல்போன்களைப் பறித்து, கேமராக்களை அணைத்துவிட்டு, வரி ஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறி ரூ.1 கோடிக்கும் அதிகமாகப் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், தான் சரியாக வரி செலுத்துவதாகக் கூறி ராஜ்குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.
அந்தக் கும்பல் கேமராக்களை அணைத்தாலும், காட்சிகளைச் சேமிக்கும் டிவிஆரை அணைக்க மறந்ததே அவர்களைக் காட்டிக்கொடுத்தது. சோதனை முடிந்து ஆவணங்கள் எதுவும் எடுக்காமல் அவர்கள் சென்றதால் சந்தேகமடைந்த ராஜ்குமார், கணக்காளருடன் சென்று விசாரித்தபோது அப்படி ஒரு சோதனையே உத்தரவிடப்படவில்லை என்பது அம்பலமானது. காவல் துறை நடத்திய தீவிர விசாரணையில், ராஜ்குமாரால் வேலையிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஓட்டுநர் சந்தோஷ் கபட்கர், பழிவாங்கும் நோக்கில் உண்மையான வருமான வரித்துறை ஊழியர்கள் சிலருடன் இணைந்து இந்த போலி ரெய்டை நடத்தியது தெரியவந்தது. தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…