“மே 4-ல் ட்விஸ்ட் இருக்கா?”… செந்தில் பாலாஜியிடம் ஸ்டாலின் கேட்ட அந்த ஒரு கேள்வி.. ரகசியம் கசிந்தது…!

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. திமுக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கணிப்புகள் தெரிவித்துள்ள சூழலில், கொடைக்கானல் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், இன்று அண்ணா அறிவாலயத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி, பெரியகருப்பன், சி.வி. கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர். குறிப்பாக, கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களின் கள நிலவரம் குறித்து முதல்வர் விரிவாகக் கேட்டறிந்தார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி மற்றும் ஈரோடு மேற்கு தொகுதியில் களம் கண்ட முத்துசாமி ஆகியோரிடம் கொங்கு மண்டலத்தின் வாக்குப்பதிவு சதவிகிதம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார். அதேபோல், வட மாவட்டங்களில் நிலவும் சாதகமான சூழல்கள் குறித்து அமைச்சர் சி.வி. கணேசன் தனது தரப்பு விளக்கங்களை முன்வைத்தார்.

மண்டல வாரியாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், திமுகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை என்பது குறித்து முதல்வர் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்ததாகத் தெரிகிறது. கருத்துக்கணிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், கள எதார்த்தம் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாக அமைச்சர்கள் முதல்வரிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி முறையாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், வாக்குப்பதிவின் போது பதிவான ரகசியத் தகவல்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் திமுகவினர் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். “வாக்கு எண்ணிக்கை மையங்களில் முகவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்; வெற்றி அறிவிப்பு வெளியாகி சான்றிதழ் பெறும் வரை முழுமையான கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். தேர்தலுக்கு பிந்தைய இந்தக் கூட்டம், திமுக மே 4-ஆம் தேதியை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருவதையே காட்டுகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

14 minutes ago

ரூ.75,000 கடனால் வந்த வினை…. தந்தையைக் கொன்று தம்பியே ஆடிய பயங்கர நாடகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…

19 minutes ago

சீறிப்பாயும் வெள்ளம்…! “தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை…” இதயத்தை நொறுக்கும் வீடியோ வைரல்…!!

நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…

20 minutes ago

EC, HC நோ சொன்னா என்ன?… டெல்லிக்கு மேட்டர் செல்லுது…. சுப்ரீம் கோர்ட்டில் ஸ்டாலினின் பவர்ஃபுல் லீகல் மூவ்… அடுத்த பரபரப்பு….!

கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…

26 minutes ago

“அந்த அங்கிள் பேண்ட்டை கழற்றி…” 4 வயது சிறுமிக்கு பாலியல் நோய்… 6 முறை கைது செய்யப்பட்ட குற்றவாளியின் கொடூர செயல்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

அமெரிக்காவின் பேட்டன் ரூஜ் பகுதியில் மனசாட்சியற்ற கொடூரச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தோணி ஜெல்க்ஸ் ஜூனியர் என்ற நபர்,…

27 minutes ago

ஐயோ… குழந்தையைக் காப்பாத்துங்க… கண் இமைக்கும் நேரத்தில்… சிறுமியைச் சூழ்ந்து கடித்துக் குதறிய தெருநாய்கள்… நெஞ்சை நடுங்க வைக்கும் CCTV காட்சி…!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில், தெருநாய்கள் தாக்கியதில் ஆறு வயது சிறுமி ஒரு படுகாயமடைந்துள்ளார். அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமியை…

32 minutes ago