உங்க வீட்டில் எல்லோரும் ஒரே சோப்பை யூஸ் பண்றீங்களா?.. உடனே இதை படிங்க.. இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து..!

Spread the love

பொதுவாகவே வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒரே குளியல் சோப்பை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஒரு சில இதில் இருக்கும் ஆபத்தை உணர்வதில்லை. பலவிதமான சரும அமைப்புகள் உள்ளவர்கள் ஒரே வீட்டில் இருக்கும் போது ஒரே சோப்பை உபயோகிப்பதால் தீமை ஏற்படுகிறது. பாத்ரூமில் பலர் சோப்பை உபயோகித்த பின் அதன் மீது நிற்கும் முறையை கழுவாமல் சோப்பை அப்படியே வைத்து விட்டு வந்து விடுவார்கள். ஏற்கனவே சோப்பை பயன்படுத்தியவருக்கு ஏதாவது சரும நோய் இருந்திருந்தாலும் நன்றாக கழுவி உலர வைத்து விட்டால் அடுத்தவர் உபயோகிக்கும் போது தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சோப்பு கட்டி ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும்.

அதனால் பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் கிருமிகள் போன்றவை சோப்பின் மேல் பகுதியில் தங்கி இருக்கும். ஒரு சோப்பை பலர் பயன்படுத்தும் போது இந்த நுண்கிருமிகள் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம். நல்ல, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உடலமைப்பு கொண்டவர்கள் பயன்படுத்தும் போது அந்த சோப்பின் மூலம் அதிகமான கிருமிகள் பரவுவதற்கு வாய்ப்பு இல்லை. வெளி காயம், அதிக எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், எக்ஸிமா என்று சொல்லக்கூடிய சரும நோய் உள்ளவர்களிடமிருந்து கண்டிப்பாக சரும நோய் பரவதான் செய்யும். ஒருவர் பயன்படுத்திய சோப்பை மற்றொருவர் பயன்படுத்தி தான் ஆக வேண்டும் என்ற நிலை வந்தால் நீங்கள் பயன்படுத்திய சோப்பை நன்கு கழுவி உலர வைத்துவிட்டு பயன்படுத்தலாம்.

கணவன் மனைவி என்றாலும் கூட இதே முறை தான் கடைபிடிக்க வேண்டும். லிக்யூட் சோப் என்ற திரவ வடிவ சோப்பு கரைசல் பாட்டில்களில் கடைகளில் கிடைக்கின்றது. இதனைப் பயன்படுத்தும் போது தொற்று என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. தோல் பராமரிப்பு என்பது பாத்ரூமுக்கு போனதும் இரண்டு சொம்பு தண்ணீரை ஊற்றி சோப்பை உடல் முழுவதும் ஒரு நிமிடத்தில் தேய்த்து விட்டு தண்ணீரை மறுபடியும் ஊற்றிக் கொண்டு பாத்ரூமில் விட்டு வெளியே ஓடி வந்து விடுவது கிடையாது. சிறிது கவனம், சிறிது நேரம், சிறிது அக்கறை, தரமான குளியல் சோப்புடன் சேரும்போது அந்த குளியல் ஆனந்த குளியலாக இருக்கும். எனவே குளிப்பதிலும் கவனம் வேண்டும். இல்லையென்றால் பல தீமைகளை சந்திக்க நேரிடும்.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago