Categories: சினிமா

எப்பொழுதுமே வசூல் நாயகன் நான் தான்னு நிரூபித்த விஜய்.. இன்று ரீ ரிலீசான கில்லி படத்தின் வசூல் இவ்ளோவோ?..

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் இப்படி ஒரு இடத்தை பிடிக்க அடித்தளமாக இருந்த திரைப்படம் தான் கில்லி/ இந்த திரைப்படம் தான் இவரை மாஸ் ஹீரோ என்ற பெயருக்கு சொந்தக்காரராக மாற்றியது.

விஜய் கேரியரின் மறக்க முடியாத எத்தனையோ படங்கள் இருந்தாலும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்று தூண்டிய படம் என்றால் அது கில்லிதான். ஒரு படம் 20 வருடம் கழித்தும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாட முடிகின்றது என்றால் அந்த பெருமை கில்லி படத்தை சேரும். கமர்சியல் ஆகவும் மாஸ் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் தான் கில்லி.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் கில்லி. ஒரு கபடி வீரராக த்ரிஷாவை காப்பாற்றி மாஸ் ஹீரோவாகவும் கடைசியில் ரொமான்ஸ் காதல் என கலந்த கலவையாக உருவாகி ரசிகர்களை கவர்ந்து விட்டது இந்த திரைப்படம்.

தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டது பல திரையரங்குகளில் இப்படம் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இன்று மட்டும் சென்னையில் 3.5 லட்சம் கலெக்சனை தொட்டிருக்கின்றது கில்லி படம். இதை பார்த்து ரசிகர்கள் இப்ப மட்டும் இல்ல எப்பவுமே ஆட்டநாயகன் , வசூல் நாயகன் விஜய்தான் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“என்னங்கடா பொரி உருண்டை எல்லாம் தர்றீங்க”… தொண்டரின் பரிசைப் பார்த்து மேடையிலேயே சிரித்துவிட்ட விஜய்…. வைரல் வீடியோ …!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. திமுக,…

29 seconds ago

விடைபெறுகிறேன்..! “இது எனது வாழ்நாள் பாக்கியம்” ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறும் டிம் குக்.. உருக்கமான பிரியாவிடை கடிதம்..!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த…

4 minutes ago

தப்பிப்பதே கடினம்… 2026 வரை விடாது துரத்தும் கேதுவின் பிடி… இந்த 4 ராசிகளுக்கும் வரப்போகும் சோதனை காலம்…!

கேது பகவான் தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்குள் ஏப்ரல் 20-ம் தேதி பிரவேசித்துள்ள நிலையில், டிசம்பர் 5, 2026…

6 minutes ago

BREAKING: மீண்டும் தொடங்கும் போர்… ஈரானை அதிர வைத்த டிரம்பின் ‘பகீர்’ வார்னிங்… உலகையே உலுக்கும் போர்ப்பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளை மாலையுடன் முடிவுக்கு வரவுள்ள…

11 minutes ago

“யார் சொன்னது மும்பை அவுட்?”… ஒரே ஒரு சதம்.. தலைகீழாக மாறிய ஐபிஎல் புள்ளிப் பட்டியல்… சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…..!

தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார…

14 minutes ago

“என் கல்லூரி மேல குண்டு போடுங்க” இஸ்ரேல் பிரதமருக்கு மெசேஜ் அனுப்பிய மாணவி… பகீர் பின்னணி..!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வினோதமான கோரிக்கை ஒன்றை விடுத்ததற்காகக்…

15 minutes ago