அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் சிக்கி 2019-ஆம் ஆண்டு சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக எழுதிய ரகசிய உயில் தொடர்பான அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்திய மதிப்பில் சுமார் 5,000 கோடி ரூபாய் (600 மில்லியன் டாலர்) மதிப்புள்ள தனது ஒட்டுமொத்த சொத்துக்களைத் தனது காதலியான கரினா ஷுலியாக் என்பவருக்கு அவர் எழுதி வைத்துள்ளார் என்பது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவரான கரினா ஷுலியாக், எப்ஸ்டீனின் மிக நெருக்கமான தோழியாகவும் காதலியாகவும் இருந்துள்ளார். உயிலின்படி, கரினாவிற்கு மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் ரொக்கப் பணத்தை எப்ஸ்டீன் ஒதுக்கியுள்ளார். அத்துடன் அவரது வாழ்நாள் செலவுகளுக்காக மேலும் 50 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி ஏற்பாடுகளையும் அவர் செய்துள்ளார். ஒரு சாதாரண மருத்துவப் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா வந்த கரினாவிற்கு, இவ்வளவு பெரிய தொகையை எப்ஸ்டீன் வாரி வழங்கியது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
சொத்துக்கள் மற்றும் ரொக்கப் பணம் தவிர, விலையுயர்ந்த நகைகளையும் கரினாவிற்குப் பரிசாக அளிக்க எப்ஸ்டீன் திட்டமிட்டிருந்தார். குறிப்பாக 33 கேரட் வைரம் பதிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட மோதிரத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்று உயிலில் குறிப்பிட்டுள்ளார். அந்த மோதிரம் ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்காகத் தயார் செய்யப்பட்டது என்றும், சிறைக்குச் செல்வதற்கு முன்பாகவே கரினாவைத் திருமணம் செய்துகொள்ள எப்ஸ்டீன் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நியூ மெக்ஸிகோவில் உள்ள பண்ணை வீடு மற்றும் பாரிஸில் உள்ள சொகுசு இல்லம் ஆகியவற்றையும் கரினாவிற்கே அவர் விட்டுச் சென்றுள்ளார்.
இருப்பினும், இந்தச் சொத்துக்கள் அனைத்தும் அப்படியே கரினாவிற்குச் சென்று சேருவதில் சட்டச் சிக்கல்கள் நீடிக்கின்றன. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவரது சொத்துக்கள் அனைத்தும் தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன. ஏற்கனவே ஒரு பகுதி சொத்துக்கள் விற்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியிருக்கும் தொகையில் வரி பாக்கி மற்றும் இதர செலவுகள் போக, உயிலில் குறிப்பிட்டபடி முழுப் பணமும் கரினாவிற்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…
கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…