இந்திய மொபைல் சந்தையில் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய சில நிறுவனங்கள் மட்டுமே தற்போது முக்கியப் போட்டியாளர்களாக உள்ளன. சந்தையில் போட்டி குறைந்துள்ளதை சாதகமாகப் பயன்படுத்தி, டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அடுத்த 3 முதல் 4 மாதங்களில் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 12 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக ‘சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச்’ நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில், நாட்டின் சிறிய கிராமங்கள் வரை 4G மற்றும் 5G சேவைகள் பரவியுள்ளதால், பொதுமக்களின் இன்டர்நெட் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளது. மறுபுறம், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் நாட்டின் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாவட்டங்களில் தங்களது அதிவேக 5G சேவையை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த அதிவேக இணையப் பயன்பாட்டு வளர்ச்சியும் கட்டண உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு அவர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். மேலும், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இதுவரை வழங்கி வந்த ‘இலவச அன்லிமிட்டெட் 5G’ சலுகையையும் இந்த கட்டண உயர்வின் போது திரும்பப் பெற வாய்ப்புள்ளது. இனி 5G டேட்டாவிற்குத் தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை வரலாம் என்ற தகவல் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…