தமிழக மின்சாரத் துறையில் மிகப் பெரிய டிஜிட்டல் புரட்சியாகப் பார்க்கப்பட்ட, சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட் மீட்டர்’ (Smart Meter) திட்டம் தற்காலிகமாக முழுமையாகக் கைவிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் பணியாளர்கள் நேரில் செல்லாமல், மின் பயன்பாட்டைத் துல்லியமாகத் தானாகவே கணக்கிட்டு ஆன்லைன் மூலம் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும் வகையில் இந்த அதிநவீன திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. முந்தைய ஆட்சிக் காலத்தில் இதற்கான உலகளாவிய பிரம்மாண்ட டெண்டர் கோரப்பட்டு, இறுதி ஒப்புதலுக்குக் காத்திருந்த நிலையில் இத்திட்டம் முடக்கப்படுவதாகப் பரவிய தகவல் நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இந்த மெகா திட்டத்தை முடக்குவதற்குப் பின்னால் இரண்டு முக்கியக் காரணங்கள் உற்றுநோக்கப்படுகின்றன. முதலாவதாக, முந்தைய ஆட்சியில் இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளதாகப் புகார்கள் வெடித்தன. இரண்டாவதாக, தவெக அரசின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியான “வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்” வழங்கும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருவதால், மின் வாரியத்திற்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச் சுமையைக் குறைக்கும் பொருட்டே இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டாம் என அரசு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்திற்கு மூடுவிழா நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவல் குறித்து மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறுத்தும் முடிவை தற்போது வரை அரசு எடுக்கவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், இத்திட்டத்திற்கு நிதி மிக அதிக அளவில் தேவைப்படுவதால், அதற்கான சாத்தியக் கூறுகளை மட்டுமே அரசு தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருவதாகக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மற்றும் நவம்பர் மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள 3.04 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்திப் பராமரிக்க டெண்டர் கோரப்பட்டு, 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் இதில் போட்டியிட்டன. தற்போதைய நிலையில் இந்தத் திட்டம் கைவிடப்படவில்லை என்றும், நிதி மேலாண்மை குறித்த ஆலோசனைகள் மட்டுமே நடந்து வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெளிவுபடுத்தியுள்ளதால், வழக்கம்போல மின் வாரியப் பணியாளர்கள் நேரில் வந்து மின் பயன்பாட்டைக் கணக்கிடும் முறையே தற்போதைக்குத் தமிழ்நாட்டில் தொடரவுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…