தமிழக சட்டசபை தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 297 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் திமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இரு கட்சிகளுமே வாக்காளர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான விவாதம் எழுந்துள்ளது. அதாவது, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் அறிக்கைகளிலும் பல முக்கிய அம்சங்கள் ஒரே மாதிரியாக இருப்பதுதான் நெட்டிசன்களின் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.
குறிப்பாக, அதிமுக தனது அறிக்கையில் மகளிருக்கான உரிமைத்தொகையை 2,000 ரூபாயாக உயர்த்துவதாக அறிவித்திருந்தது; அதேபோல் திமுகவும் தங்களது அறிக்கையில் 2,000 ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. முதியோர் உதவித்தொகையைப் பொறுத்தவரை இரு கட்சிகளுமே 2,000 ரூபாய் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளன. மீனவர்களுக்கான நிவாரணத் தொகையை 12,000 ரூபாயாக உயர்த்துவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த அதே வேளையில், முதல்வர் ஸ்டாலினும் அதே தொகையைத் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதால் இது ‘காப்பி’ செய்யப்பட்டதா என்ற கேள்வியை முன்வைக்கின்றனர் நெட்டிசன்கள்.
விவசாயம் சார்ந்த அறிவிப்புகளிலும் இரு கட்சிகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை. நெல்லுக்கான ஆதார விலை 3,500 ரூபாய் மற்றும் கரும்புக்கான ஆதார விலை 4,500 ரூபாய் என இரு தரப்புமே ஒரே விலையை அறிவித்துள்ளன. வீட்டு உபயோகப் பொருட்களைப் பொறுத்தவரை அதிமுக அரிசி அட்டைதாரர்களுக்கு ‘ஃபிரிட்ஜ்’ வழங்குவதாகக் கூறிய நிலையில், திமுக அதற்குப் போட்டியாக 8,000 ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கக் கூடிய கூப்பன்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இவ்வாறு மிக முக்கியமான ஐந்துக்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அப்படியே ஒத்துப்போவது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒற்றுமைகளைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் மீம்களும் விவாதங்களும் பரவி வருகின்றன. “அதிமுக வெளியிட்ட அறிக்கையைத் தான் திமுக காப்பியடித்ததா?” என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப, “மக்களின் தேவைகள் ஒன்றாக இருக்கும்போது வாக்குறுதிகளும் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை” என மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். எது எப்படியோ, போட்டிப் போட்டுக்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த இலவச மற்றும் நலத்திட்டங்கள் தேர்தலில் எந்த அளவிற்குப் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…
இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…