பொதுவாகவே ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலான விஷயம் என்னவென்றால், உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடல் எடையுடன் இருப்பது தான். ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் பெரும்பாலானவர்களுக்கு தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பு என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
உடல் எடை அதிகரிப்பு பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்த உடற்பயிற்சி செய்ய வேண்டியது முறையான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியதும் அவசியமாகும். ஆனால் வேலை காரணமாக பலருக்கும் முறையான உடற்பயிற்சி செய்வதற்கான நேரம் கிடைப்பதில்லை. இன்னும் சிலர் உணவுகளில் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும் விதமாக எந்தவித உணவு கட்டுப்பாடுகளும் இல்லாமல் உடல் எடையை எப்படி கற்றுக்கொள் வைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
தினசரி உணவில் பிரஷ் ஆன பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனைப் பின்பற்றினால் உணவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பசியை கற்றுக்கொள் வைக்கலாம்.
காய்கறிகள் மற்றும் பழங்கள் நீண்ட நேரம் ஆற்றலை வழங்குவதோடு துரித உணவுகள் மீதான ஆசையையும் குறைப்பதில் உதவுகிறது. மேலும் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் இது பெரிதும் உதவியாக இருக்கும். குறிப்பாக எடையை கற்றுக்கொள் வைக்க வேண்டும் என்றால் சாப்பிடும் போது உணவை ருசித்து அதன் மீது முழு கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும். சமூக வலைத்தளங்கள் பார்த்தபடி அல்லது தொலைக்காட்சியை பார்த்தபடி சாப்பிடுவதால் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற கணக்கே இல்லாமல் பசி போன பிறகும் நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்க நேரிடும்.
உங்களுக்கு எப்போது பசி அடங்கியது, வயிறு நிரம்பியது என்பதற்கான உடலின் சிக்னல்களை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் உணவின் மீது கவனம் வைத்து சாப்பிட வேண்டும். உடல் எடையை கட்டுக்குள் வைக்க தினசரி சுறுசுறுப்பான செயல்பாடு என்பது அவசியம். அதற்காக ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நடனம், யோகா, நீச்சல் அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது செயலில் ஈடுபட்டு உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும்.
இது உடல் எடையை வெகுவாக குறைக்க உதவியாக இருக்கும். தினமும் சிறிது தூரம் நடப்பது, போதுமான மற்றும் தரமான தூக்கமாகிய அவற்றை சரியாக கடைபிடித்தாலும் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பான உடலை பெறலாம். குறிப்பாக போதுமான தூக்கம் பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சம நிலையில் வைக்கின்றது. எனவே உடல் எடையை குறைக்க உணவை கட்டுப்படுத்துவதை விட்டுவிட்டு இனி பசியை சரியான முறையில் கையாளுவதை கற்றுக் கொள்ளுங்கள். மன அழுத்தம் காரணமாக கூட சிலர் அதிகமாக சாப்பிடுவார்கள். குறிப்பாக இனிப்புகளுக்கான இயக்கம் அதிகரிக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் தியான, ஆல் த சுவாசம் அல்லது நாட்குறிப்பு எழுதுதல் போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மன அழுத்தத்தை குறைத்தால் உடல் எடை தானாகவே குறைந்து விடும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…