அதிமுகவில் வேட்பாளர் தேர்வில் எடப்பாடி பழனிசாமி எடுத்து வரும் அதிரடி முடிவுகள், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா பாணியில் தனி ஒரு அதிகார மையமாக உருவெடுத்துள்ள இபிஎஸ், இந்த முறை வாரிசுகளுக்கோ அல்லது மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரைகளுக்கோ செவிசாய்க்காமல் ‘ஆபரேஷன் கிளீன் ஸ்வீப்’ என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
மேலும் “முன்னதாக உங்கள் தொகுதியில் வெற்றி பெற்று வாருங்கள், மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்” என முகத்திற்கு நேராகவே கறார் காட்டும் அவர், பல மாஜிகளின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் வேட்பாளர் தேர்வில் எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமி, இதற்காக ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரிகளைக் கொண்டு ஒரு ரகசியக் குழுவை அமைத்து கள நிலவரத்தைத் துல்லியமாக ஆய்வு செய்துள்ளார். கட்சி இக்கட்டான சூழலில் இருந்தபோது தன்னுடன் நின்ற விசுவாசிகளுக்கும், மக்களிடையே நற்பெயர் கொண்ட புதிய முகங்களுக்கும் 80 சதவீத இடங்களை ஒதுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்தை உடைத்து, அவர்களின் தலையீட்டைத் தடுத்துள்ள இந்த ‘ருத்ரதாண்டவம்’ கட்சிக்கு ஒருபுறம் புத்துயிர் அளித்தாலும், மறுபுறம் சீனியர்களின் அதிருப்தியால் உட்கட்சிப் பூசல் வெடிக்குமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிச்சலான முடிவு தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்திலுள்ள பராஜ் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷம்சுதீன் மித்யா, தனது 15 வயது…
சேலம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை ஏமாற்றி, அவர்களின் பெயரில் கோடிக்கணக்கில் வங்கிக் கடன் பெற்று…
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி. முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…
தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…