கூலி முதல் பைசன் வரை… முழுநேர சினிமா விமர்சகராகவே மாறிவிட்டார் CM… இதுக்கெல்லாம் நேரமிருக்கா..? EPS-ன் எக்ஸ் பதிவு வைரல்..!!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய எக்ஸ் பதிவில், நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்த போது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன். ஆனால், இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலினி-ன் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களை பார்ப்பதிலோ, திறமையான திரைப்பட குழுவினரை பாராட்டுவதிலோ எந்த தவறும் இல்லை, ஆனால் தான் எதற்கு முதல்வர் ஆனோம்? என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக மாறிவிட்டார் இன்றைய பொம்மை முதல்வர் என்பதுதான் கவலை அளிக்கிறது,. ஜெய்பீம்  படம் பார்த்து உள்ளம் உலுக்கிப் போனவர்.

தன் ஆட்சியில் தொடர்கதையாக உள்ள அஜித்குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? ஜெய்பீம் முதல் கூலி, பைசன் வரை, சினிமாக்களைப் பார்க்க, ரசிக்க, கருத்து தெரிவிக்க தான் இன்றைய முதல்வருக்கு நேரம் இருக்கிறது. தென் தமிழகம் மழையில் மிதந்த போது, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு டெல்லி பறந்தவர் தானே நீங்கள்? தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கூலி திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்? அதே போலத் தான், இப்போதும் மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்து பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், பைசன் படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா? அது சரி, விவசாயிகளை, ஏழை எளிய மக்களைப் பார்க்க, அவர்களின் வேதனைகளைக் கேட்டறிய உங்களுக்கு நேரம் இருக்காது தான். விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

Soundarya

Recent Posts

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

6 minutes ago

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

11 minutes ago

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

18 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

25 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

40 minutes ago