Categories: அரசியல்

பழைய ஓய்வூதியம் எங்கே…? ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு…. எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு…!!

Spread the love

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அரசு ஊழியர்களை ஏமாற்றிவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தேர்தல் நெருங்கும் வேளையில் மத்திய அரசின் திட்டத்தையே பெயர் மாற்றி ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) என ஸ்டிக்கர் ஒட்டி வெளியிட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது அரசு ஊழியர்களின் போராட்டங்களைத் தற்காலிகமாகச் சமாளிக்கச் செய்யப்பட்ட ஒரு கண்துடைப்பு நாடகம் என்றும் கூறியுள்ளார்.

மத்திய அரசின் ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையே’ (UPS) புதிய மொந்தையில் பழைய கள் என்பது போலத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள பழனிசாமி, இதற்குச் சில சங்க நிர்வாகிகள் துணை போவது வேடிக்கையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அரசு ஊழியர்கள் ஒருநாள் உண்மையை உணர்ந்து, தங்களை வஞ்சித்த திமுகவிற்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார். திமுக அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை ஏமாற்றும் ஒரு தந்திரம் என்பதே அதிமுகவின் நிலைப்பாடாக உள்ளது.

Devi Ramu

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

15 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

26 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

28 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

33 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

37 minutes ago