“அதிமுகவில் இணைந்த 7 நாட்களில்”…. லீமா ரோஸுக்கு எடப்பாடி கொடுத்த ‘வெயிட்டான’ பதவி… ஆடிப்போன அரசியல் களம்….!

Spread the love

பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மனைவியும், ஐஜேகே கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான லீமா ரோஸ், கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஒரு வார காலத்திற்குள்ளேயே அவருக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பை வழங்கி அதிமுக தலைமை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

முன்னதாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி (IJK) ஆகியவற்றில் பணியாற்றிய லீமா ரோஸ், அண்மையில் ஐஜேகே-வில் இருந்து விலகினார். கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் இருந்த அவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் லீமா ரோஸ் மார்ட்டின் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மாநில அளவிலான இந்த “வெயிட்டான” பதவி அவருக்கு வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பதவியின் மூலம் தேர்தல் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபடுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் இந்த அதிரடி முடிவின் பின்னணியில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க லீமா ரோஸிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் மாநிலப் பொறுப்பைப் பெற்றுள்ள லீமா ரோஸின் நியமனம் அதிமுக வட்டாரத்தில் ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

கணவன் மனைவியா வாழ்த்தோமே.. 2 முறை அபார்ஷன் வேற… காதலனைத் தேடி கிராமத்திற்கே வந்த டெல்லி காதலி… அடுத்து நடந்த டுவிஸ்ட்..!!

டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…

8 minutes ago

என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்… நரகத்தை நேரில் பார்த்த பெண்.. டெல்லி கொலைக்கு முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்..!!

டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…

23 minutes ago

BIG BREAKING: தேர்தல் நாளில் தேர்தல் ஆணையத்திற்கு விஜய் பரபரப்பு கடிதம்..!!

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல்…

40 minutes ago

‘கன்னித் தன்மை’ கொண்ட பிராமண பெண் வேணும்… விவாகரத்தான ஐஐடி பட்டதாரிக்கு வந்த விசித்திர ஆசை… தரகர் கொடுத்த அதிரடி செக்.. கிழிந்து தொங்கும் ஆணாதிக்கம்..!!

ஐஐடி (IIT) பட்டதாரியும், ஒரு நிறுவனத்தின் இயக்குனருமான 37 வயதுடைய விவாகரத்தான நபர் ஒருவர், மணப்பெண் தேடுவதற்காக விதித்த விசித்திரமான…

47 minutes ago

வாக்குச்சாவடியில் அஜித் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை..? பற்றியெரியும் அரசியல் களம்.. உண்மையை உடைத்த மேலாளர் சுரேஷ் சந்திரா…!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23) தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் குமார் அதிகாலையிலேயே வந்து தனது…

50 minutes ago

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்… சவரனுக்கு ரூ.720 குறைந்தது… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று (ஏப்ரல் 23) அதிரடியாகக் குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்குச்…

54 minutes ago