“அம்மாவின் ஆன்மா மன்னிக்காது”…. திமுக – அதிமுக ரகசியக் கூட்டணி அம்பலம்?… இபிஎஸ் செய்த அந்த ஒரு தவறு… கசிந்த அதிர்ச்சி தகவல்…!

Spread the love

தமிழக அரசியலின் அசைக்க முடியாத பேரியக்கமாக, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இன்று தன் தனித்துவத்தை இழந்து சிதைந்து கொண்டிருப்பது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான மற்றும் சுயநலப் போக்குகளால், இயக்கத்தின் 70 விழுக்காடு பலம் சிதைந்துவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கட்சியின் மூத்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு, மாற்று முகாம்களை நோக்கி நகர்வதே இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இந்த அவல நிலையைக் கண்டும் எடப்பாடி பழனிசாமி தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே முற்படுகிறார் என்ற அதிருப்தி தற்போதைய எம்.எல்.ஏ-க்களிடமும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை முன்வைத்து நகரும் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கைகோர்க்கக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை எடப்பாடி பழனிசாமியின் முதலமைச்சர் நாற்காலி ஆசையே கெடுத்துவிட்டதாகக் கள யதார்த்தங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதிமுக, தவெக மற்றும் காங்கிரஸ் இணைந்த ஒரு வலுவான கூட்டணி அமைந்திருந்தால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியை அறுவடை செய்திருக்க முடியும். லீமா ரோஸ் போன்ற முக்கிய ஆளுமைகளால் உறுதிப்படுத்தப்பட்ட இக்கூட்டணிப் பேச்சுவார்த்தையை, சுயநல நோக்கோடு எடப்பாடி பழனிசாமி நிராகரித்தது, கழகத் தொண்டர்களுக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத துரோகமாகும். ஆளும் திமுகவின் மறைமுக ஆதரவோடு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்ற அவரது ஒற்றை இலக்கு, அம்மாவின் ஆன்மாவைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த திமுக-இபிஎஸ் இடையேயான ரகசியப் புரிந்துணர்வின் உச்சக்கட்டம் தற்போது கரூரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு துயர நிகழ்வில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறச் செல்லும் தவெக தலைவரின் பயணத்தைச் சட்ட ரீதியாகத் தடுக்க ஆளும் தரப்பு முயலும்போது, அதற்கு வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்யாமல் எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. ஒருபுறம் கட்சியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்க, மறுபுறம் கழகத் தொண்டர்களின் ஜீவாதாரமான புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடம் முறையான பராமரிப்பின்றி, இரவு நேரங்களில் மின் விளக்குகள் கூட எரியாமல் பொலிவிழந்து கிடப்பது வேதனைக்குரியது. தன் குடும்ப நலனுக்காகவும், வாரிசு மிதுன் பழனிசாமியின் அரசியல் நுழைவிற்காகவும் காய்களை நகர்த்தும் தலைமைக்கு, அம்மாவின் நினைவிடத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பக்கூட துணிவில்லாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

தொடர்ச்சியாக 11 தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகும், பொதுச்செயலாளர் பதவியை விட்டு நகராமல், கே.பி.முனுசாமி மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களின் சுயநல ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு அதிமுகவை அழிவுப்பாதைக்கு இபிஎஸ் அழைத்துச் செல்வதாகக் குமுறுகின்றனர் உண்மைத் தொண்டர்கள். கடந்த ஐந்து ஆண்டுகால எதிர்க்கட்சி வரிசையில், தலைமைப் பீடம் மட்டுமே கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்துள்ள நிலையில், தற்போது ‘உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகுங்கள்’ என்று வெற்று முழக்கமிடுவது ஏழைத் தொண்டர்களை ஏமாற்றும் செயலாகும். சொந்தப் பணத்தைச் செலவழித்துக் கட்சியை வளர்த்த எளிய தொண்டர்களுக்குத் தேர்தல் செலவிற்கான நிதியைத் தனது சொந்தப் பெட்டியிலிருந்து வழங்க எடப்பாடி பழனிசாமி முன்வருவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

“சாதாரண தொண்டனாக இருந்து உயர்ந்தேன்” என்று மேடைகளில் பெருமை பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு, தன்னைப்போல மற்றொரு எளிய தொண்டனோ அல்லது துடிப்பான இளைஞனோ தலைமைப் பொறுப்பிற்கு வருவதை ஏற்கும் மனப்பக்குவம் இல்லை என்பதே உண்மை. தான் ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் இத்தகைய சுயநலப் போக்கால், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூட நிர்வாகிகள் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது. விசுவாசத்தின் காரணமாகவும், மாற்று வழியில்லாமலும் இன்னும் கட்சியில் நீடிக்கும் மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும், இனியாவது இந்தச் சுயநலத் தலைமைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். மாபெரும் இயக்கத்தைத் துடிப்பான இளைஞர்களிடம் ஒப்படைத்து, அதிமுகவைக் காப்பாற்ற முன்வருவதே இந்தத் தருணத்தில் காலத்தின் கட்டாயமாகும்.

Nanthini

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

1 மணத்தியாலம் ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

1 மணத்தியாலம் ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

1 மணத்தியாலம் ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

1 மணத்தியாலம் ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

2 மணத்தியாலங்கள் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

2 மணத்தியாலங்கள் ago