மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன் ஆகியோர் பங்கேற்றதைத் தொடர்ந்து, புதிய டிஜிபி தேர்வுக்கான 3 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டது. ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரது பெயர்கள் அடங்கிய இந்த பட்டியலில் இருந்து, தற்போது எல்லைப் பாதுகாப்பு படை டிஜிபியாக இருக்கும் மகேஷ்குமார் அகர்வால் தமிழகத்தின் புதிய டிஜிபியாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனது 22 வயதிலேயே ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்று, தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் எஸ்பியாகத் தனது தமிழகப் பணியைத் தொடங்கினார்.
அதன்பின்னர் சென்னை பூக்கடை துணை கமிஷனர், சிபிசிஐடி ஐஜி, மதுரை கமிஷனர், மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்பட களமிறங்கிச் செயல்பட்டார். குறிப்பாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சேலம்-சென்னை ரயில் 5.78 கோடி ரூபாய் கொள்ளை வழக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு, மற்றும் பெண் பொறியாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு போன்ற சவாலான வழக்குகளைத் தனது சிறப்பான தலைமையின் கீழ் விசாரித்துக் குற்றவாளிகளைக் கைது செய்த பெருமை இவருக்கு உண்டு.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…