பெரும் அதிர்ச்சி..! ஓடும் ரயிலிலிருந்து 19 வயது பெண்ணை கீழே தள்ளிவிட்ட போதை ஆசாமி… கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதி..!!

Spread the love

கேரளா மாநிலம் வர்கலா அருகே குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளியதில் பலத்த காயமடைந்த 19 வயது பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். ஸ்ரீகுட்டி என்ற பெண் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் ஆலுவாவிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. சுரேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும்  போலீசார் தெரிவித்தனர்.

ஸ்ரீகுட்டி தற்போது திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். கேரள எக்ஸ்பிரஸ் இரவு 8.30 மணியளவில் வர்க்கலா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரீகுட்டியும் அவரது தோழி அர்ச்சனாவும் கழிப்பறையிலிருந்து வெளியே வந்தபோது, ​​கதவின் அருகே நின்று கொண்டிருந்த சுரேஷ் குமார், அப்பெண்ணை ஓடும் ரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அவசரச் சங்கிலியை இழுத்து, காவல்துறை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அந்த பெண் வர்க்கலா நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Soundarya

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

2 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

2 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

2 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

2 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

2 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

2 மணத்தியாலங்கள் ago