அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்ட வீழ்த்திய ஈரான்.. கடலில் தத்தளித்த பைலட்டுகளை மீட்ட “இந்தியரின்” ட்ரோன்.. உலகையே மிரளவைத்த மாஸ் சம்பவம்..!!

Spread the love

ஹார்மூஸ் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவின் அதிநவீன ‘ஏஎச்-64 அப்பாச்சி’ ஹெலிகாப்டர் ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் போது ஹெலிகாப்டரில் இருந்து கடலில் குதித்த அமெரிக்க ராணுவத்தின் இரண்டு பைலட்டுகளையும், ‘கார்சேர்’ என்ற அதிநவீன கடல்சார் தன்னாட்சி ட்ரோன் வெறும் 2 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்டு சாதனை படைத்துள்ளது. அமெரிக்க ராணுவ வரலாற்றிலேயே கடலில் தத்தளித்த வீரர்களை மீட்க இத்தகைய தன்னாட்சி கடல் ட்ரோன் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்க கடற்படையின் 5-வது கடற்படைப் பிரிவின் கீழ் இயக்கப்படும் இந்த கார்சேர் ட்ரோன், கடலில் 35 நாட்ஸ் வேகத்தில் செல்லக்கூடியது. சுமார் 450 கிலோ எடையைச் சுமந்து கொண்டு, 1000 நாட்டிக்கல் மைல் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட இந்த ரிமோட் கண்ட்ரோல் ட்ரோன், ஆபத்தான கடல் சூழலிலும் மனித உதவியின்றி பைலட்டுகள் இருக்குமிடத்தைக் துல்லியமாகக் கண்டறிந்து அவர்களைப் பத்திரமாக மீட்டெடுத்துள்ளது.

அமெரிக்கப் பைலட்டுகளின் உயிரைக் காப்பாற்றி உலகப் புகழ்பெற்ற இந்த கார்சேர் ட்ரோனைத் தயாரித்த பெருமை டெக்சாஸைத் தலைமையிடமாகக் கொண்ட ‘சரோனிக் டெக்னாலஜிஸ்’ (Saronic Technologies) என்ற நிறுவனத்தையே சேரும். இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றி வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பொறியாளரான விபவ் அல்டேகர் . செயற்கை நுண்ணறிவு மற்றும் கடல்சார் தன்னாட்சி தொழில்நுட்பத்தில் நிபுணரான இவரது கூட்டுத் தயாரிப்பில் உருவான இந்த ட்ரோன், இன்று அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிரைக் காத்து சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” “பூங்காற்று திரும்புமா பாட்டு கேட்ட காரோட்டிக்கு ஷாக்… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய ஸ்கூட்டி பெண்… பகீர் சம்பவம்…!!!

திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…

3 minutes ago

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

25 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

43 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

53 minutes ago

“என் மகளை கிண்டல் பண்றியா…?” கணவரை காணாமல் தவித்த மனைவி…. பல கி.மீ தூரத்தில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. சினிமாவை மிஞ்சிய நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…

1 மணத்தியாலம் ago