இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. வங்கிகளில் தொடங்கி டிக்கெட் புக்கிங் என அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. ஆதார் அட்டையை நாம் வைத்திருந்தாலும் சில நேரங்களில் வெளியில் செல்லும்போது மறந்து விடுவோம். ஆதார் நம்பரும் நம்முடைய நினைவில் இருக்காது. இப்படியான நிலையில் ஆதார் அட்டையை பெற UIDAI இணையதளத்திற்கு செல்லாமல் whatsapp மூலமாக பெறலாம். இந்திய குடிமகன்களுக்கு இதற்கான வசதியை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக MyGov உதவி மைய சாப்பாட் மூலமாக இந்த ஆதார் அட்டை pdf வடிவில் நம் வாட்ஸ் அப்பில் பெற முடியும்.
இதற்கு முதலில் MyGov உதவி மையத்தின் whatsapp எண்ணான 9013151515 என்பதை போனில் சேமிக்க வேண்டும்.
பிறகு whatsapp பக்கத்திற்குச் சென்று Hi என இந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பி உரையாடலை தொடங்கவும்.
அதில் Digilocker Services என்பதை தேர்வு செய்ய வேண்டும். டிஜி லாக்கர் கணக்கு இல்லை என்றால் உடனடியாக டிஜி லாக்கர் பக்கத்திற்கு சென்று உருவாக்கவும்.
ஆதாருடன் டிஜி லாக்கர் கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இதனை செய்ய முடியும்.
உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி உள்ளிட வேண்டும்.
உங்களின் டிஜி லாக்கர் கணக்கில் சில ஆவணங்களின் பட்டியல் சேமிக்கப்பட்டிருக்கும். அதில் ஆதார் கார்டு என்பதை தேர்வு செய்து உங்களுடைய whatsapp மூலம் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…