திருவண்ணாமலை மாவட்டம் பக்கிரிபாளையம் கிராமத்தில் சக்திவேல் (50) என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனிநபருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ள நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக மனைவி மற்றும் மகள்கள் சக்திவேலை பிரிந்து திருப்பூரில் தனியாக வசித்து வருகின்றன. இந்நிலையில் சக்திவேல் முன்னதாக கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த நிலையில் தற்போது திமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அந்தப் பகுதியில் திமுக நிர்வாகிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்களுடன் சக்திவேல் நெருங்கிய பழக்கத்தில் இருந்து உள்ளார்.
இதனிடையே ஜவ்வாது மலை அடிவார பகுதியை சேர்ந்த அமிர்தம் (50) என்பவருடன் சக்திவேல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். அமிர்தத்திற்கும் ஏற்கனவே திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ள நிலையில் அவருடைய கணவர் வேறு திருமணம் செய்து கொண்டு அமிர்தத்தை கைவிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சக்திவேல் தன்னுடைய குத்தகை விவசாய நிலத்தில் சிமெண்ட் கல்லால் வீடு கட்டி, மேலே கூரை பரப்பப்பட்ட குடிசை வீட்டில் அமிர்தத்துடன் வசித்து வந்தார்.
நேற்று இரவு சக்திவேல் மற்றும் அமிர்தம் இருவரும் குடிசை வீட்டுக்குள் இருந்த நிலையில் குடிசை திடீரென்று தீப்பற்றி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. இதில் குடிசை வீட்டில் வெளிப்புற கதவு தாளிட்ட நிலையில் இருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தில் இருவரின் உடல்களும் உள்ளே முழுவதுமாக கருகி சாம்பலான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதிகாலை கரவை மாட்டில் பால் கறக்க சென்ற நபர் குடிசை எரிந்து சாம்பலாகி இருப்பதையும் உள்ளே இரண்டு உடல்கள் கருகிய நிலையில் இருப்பதையும் கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே சம்பப் இடத்திற்கு விரைந்த போலீசார் இருவருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தீவிர படுத்தினர். இந்த சம்பவத்தில் அமிர்தத்தின் முன்னாள் கணவரான ஜவ்வாது மலை அடிவாரம் வலசை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் பிடிபட்ட நிலையில் அவர்தான் குற்றவாளி என்பது தெரிய வந்தது. என் பொண்டாட்டி என்னை விட்டு இன்னொருத்தன் கூட குடும்பம் நடத்துறத என்னால தாங்கிக்க முடியல, அதனாலதான் நான் குடிசைக்கு பெற்றோர் ஊற்றி கொளுத்தி வெளியில் தாழ்ப்பாள் போட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…