உலகளாவிய உணவு டெலிவரி சேவைகள் குறித்த நம்பகத்தன்மை தற்போது மீண்டும் கேள்விக்குறியாகும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டோர் டேஸ் நிறுவனத்தில் டெலிவரி ஓட்டுனராக பணியாற்றிய லிவி ரோஸ் ஹென்டர்சன் என்பவர் பணியில் இருந்த போது தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சில மணி நேரங்கள் அடங்கிய நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நியூயார்க் நகரில் உள்ள ஒரு வாடிக்கையாளரின் இல்லத்திற்கு உணவு கொடுக்க சென்ற அந்தப் பெண், கதவு திறந்திருந்ததையும் வாடிக்கையாளர் பாதி பகுதி ஆடை இன்றி சோபாவில் இருந்ததையும் பார்த்துள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து தான் பணியாற்றும் நிறுவனத்தில் புகார் அளித்ததுடன் வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். நான் பாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்ததற்காக என்னுடைய கணக்கை நான் பணியாற்றும் நிறுவனம் முடக்கியுள்ளது என்று அந்த பெண் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அந்த நிறுவனம், ஓட்டுநர் மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கையும் தற்காலிகமாக செயல் இழக்க செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமை குறித்த புகார்களை மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக் கொள்கின்றோம். தனியுரிமை நீரலை அனுமதிக்க முடியாது என்றும் இதற்கு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…
அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…
சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…
திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…
சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…